INTRO :
300 ஆண்டுகள் அழியாமல் இருந்த சடலம் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” குஜராத் மாநில லட்ச்மண்புரா பகுதியில் உள்ள ஒரு இறைநேச பெருந்தகை அடக்கமாகியுள்ள தர்ஹா ஷரீஃப் இன் சாலையை அகலப்படுத்தும்போது வெளிப்பட்ட- *300வருட பழமையான அழியாத இறைநேச பெருந்தகையின் பரக்கத்தான ஜனாஸா (உடல்)

#வலிமார்களின் உடலை மண் திண்ணாது அவர்கள் உடல் அழியாது அவர்கள் உயிருடன் உள்ளார்கள் பல ஹதீஸ் ஆதரங்களை காட்டினாலும் இந்த வஹ்ஹாபிச வாதிகளின் உள்ளம் ஏற்காது...

இறைவன் வலிமார்கள் பற்றி ஆதரங்களை அவ்வப் போது வெளிப்படுத்தியே வருகிறான்..

வஹ்ஹாபிச வாதிகளே யோசியுங்கள்.. “ என கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி (30.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் பகிரப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது 2019 ஆம் ஆண்டில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் 32 ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய துறவி ஒருவரின் உடல் மழையால் சேதமடைந்தது என்றும், அதனை தோண்டியெடுத்தபோது உடல் இவ்வாறு அழியாமல் இருந்தது என்றும் சில செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.


அசல் பதிவினை காணுவதற்கு :- dainikekattorbangladesh.com I Archive 2

மேலும் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது, நாம் yandex.com இணைய தேடுதல் தளத்தில் குறித்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக ரிவஸ் இமேஜ் செய்த போது, 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் திகதி True Journalizm என்ற டுவிட்டர் கணக்கில் குறித்த புகைப்படங்கள் அனைத்து பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் ஒரு சகோதரி தொடர்ந்து தனக்கு குறூந்தகவல் அனுப்புவதாகவும், குறித்த குறூந்தகவலில் Abu Bakr என்பர் மின்சாரம் தாக்கப்பட்டு சுயநிலவை இழந்ததாகவும், தனது தந்தைக்கா இறைவனிடம் பிராத்திக்குமாறு அவர் கேட்டுகொண்டுள்ளதாக பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அசல் பதிவினை காணுவதற்கு :- twitter.com I Archive 2

குறித்த இணைய செய்திக்கு முன்னரே இந்த டுவிட்டர் பதிவு பதியப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இணைய செய்தியும் தவறானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தகவலினையும் எம்மால் உறுதி செய்துக்கொள்ள முடியவில்லை.

FactCheck: வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம் என்று பகிரப்படும் வதந்தி…

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 300 ஆண்டுகள் அழியாமல் இருந்த சடலம் எனக் கூறி பகிரப்படும் தகவலில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:300 ஆண்டுகள் அழியாமல் இருந்த சடலம்; உண்மை என்ன தெரியுமா?

Fact Check By: S G Prabu

Result: False