INTRO :
பலஸ்தீன நாட்டில் யுத்தத்தின் போது கையில் புத்தகங்களுடன் அழுதவாறு இருந்த குழந்தை சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா வளர்ந்துவிட்டார் என ஒரு புகைப்படத்துடன் இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Kattankudy Cid என்ற பேஸ்புக் கணக்கில் ” "சாரா" 2003 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தனது வீடு இடிக்கப்பட்டபோது, தனது புத்தகங்களை வாரி எடுத்து கதறி அழுத, பலஸ்தீனிய பெண் சாரா, இப்போது மொழியியலில் முதுகலை பட்டதாரியாக ஒரு புகழ்பெற்ற கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.” என இம் மாதம் 19 ஆம் திகதி (19.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவல் பலராலும் பல வருடங்களாக இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் குறித்த சிறுமியின் புகைப்படத்தினை கொண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த புகைப்படத்தினை எடுத்த புகைப்படக்கலைஞரினை எம்மால் கண்டறிய முடிந்தது.

குறித்த புகைப்படத்தில் இருந்த Watermark இனை வைத்து நாம் குறித்த புகைப்படக்கலைஞரான Fadi A Thabet என்பரை நாம் கண்டறிந்தோம்.

தொடர்ந்து நாம் அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் மேற்கொண்ட சோதனையின் போது, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அவர் குறித்த புகைப்படம் தொடர்பாக பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

facebook.com| Archived Link

அதில், அவர் பல பேஸ்புக் பக்கங்கள் புதிய கதையினை பரப்புவதாகவும் அனைத்தும் வதந்தி எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரின் கணக்கினை நாம் ஆய்வு செய்த போது, குறித்த புகைப்படத்தில் உள்ள யுவதியினை பற்றிய பதிவும் அவர் பதிவிட்டு இருந்தமை காணக்கிடைத்தது.

அதில், குறித்த யுவதி Susan Hamed Iraqi என தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஒரு முகாமைத்துவ அதிகாரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Faebook.com| Archived Link

குறித்த பெண் தொடர்பாக நாம் தேடிய போது அவர் TEDx என்ற யூடியுப் தளத்தில் 2013 ஆம் ஆண்டு வழங்கிய காணொளி கிடைக்கப்பெற்றது. அதில், அவர் human development and generation of social values என்ற அமைப்பின் நிறுவனர் என்றும் அங்கீகரிக்கப்பட்ட மனித மூலதன வளர்ச்சி பயிற்றுவிப்பாளர் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தமை காணக்கிடைத்தது.

எமது தேடலுக்கு அமைய, பாலஸ்தீன பெண் சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என்று கூறி பகிரப்பட்ட தகவல் வதந்தி என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பாலஸ்தீன பெண் சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா?

Fact Check By: Nelson Mani

Result: False