குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல் உண்மையா?

False

குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது என்ற ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Yalarivan Tamil என்ற பேஸ்புக் கணக்கில் ” குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விடயத்தில் ஒரு மரபு இருக்கிறது.

குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள்.

குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம்.

முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம்.

இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க!

யாழறிவன்…” என்று 2014 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 04 ஆம் திகதி (04.10.2014) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி தற்போதும் இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fact Check (உண்மை அறிவோம்) 


இதுதொடர்பாக, நாம் குறித்த விடயம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, இது பல வருடங்களாக பரவிவரும் ஒரு நம்பிக்கையே என தெரியவந்தது.

குதிரை சிலை அமைப்பதில் சில டிசைன், ஸ்டைல் நோக்கத்திற்காகவே இவ்வாறு குதிரையின் கால்கள் அனைத்தும் சம நிலையில் அல்லது ஒரு கால் மேலே உயர்த்தியபடி, 3 கால்கள் தரையில் ஊன்றியபடி, அல்லது முன்னங்கால்கள் மேலே உயர்த்தியபடி, மற்ற 2 கால்கள் தரையில் ஊன்றியபடி என நிறுவப்படுகிறது.

இதில், ஒருவர் எப்படி இறந்தார் என்பதை பொறுத்தெல்லாம் கணக்கிட்டு, குதிரை சிலையில் அதனை அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுவது தவறாகும்.

இதுபற்றி ஏற்கனவே பல ஆங்கில இணையதளங்கள், ஊடகங்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, இது கற்பனையான கட்டுக்கதை, இதில் எந்த நிரூபிக்கப்பட்ட மரபும் கிடையாது என நிரூபித்திருக்கிறார்கள்.

Snopes.com LinkEftours.comStackexchange.com

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை வாசிப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள் 

இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடுதலில் பெரும்பாலான குதிரை வீரர் சிலைகள், அமைக்கப்பட்ட விதத்திற்கும், அதில் இருக்கும் நபர் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என, தெளிவாகிறது. 

சிலவற்றில் ஒற்றுமை இருக்கலாம், அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், குதிரை வீரன் சிலை நிறுவுவதற்கு என பிரத்யேக நடைமுறை எதுவும் இல்லை என்பதே இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விசயமாகும்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெரும்பாலான குதிரை வீரர் சிலைகள், அமைக்கப்பட்ட விதத்திற்கும், அதில் இருக்கும் நபர் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என, தெளிவாகிறது. 

சிலவற்றில் ஒற்றுமை இருக்கலாம், அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், குதிரை வீரன் சிலை நிறுவுவதற்கு என பிரத்யேக விதிமுறை எதுவும் இல்லை என்பதே இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விசயமாகும்.

Avatar

Title:குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல் உண்மையா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *