
மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் என ஒரு புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” 1928ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது #மட்டக்களப்பு #கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் … 😍👍” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பாக, நாம் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.
குறித்த தேடுதலில் போது,இது மட்டக்களப்பில் உள்ள கல்லடி பாலம் அல்ல இது iritty bridge என்று கண்டறியப்பட்டது.

iritty பாலம் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கன்னூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மேலும் குறித்த பாலம் 1933 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் கட்டப்பட்டடுள்ளது.
நாம் மேலும் மேற்கொண்ட சோதனையின் போது இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லடி பாலத்தின் புகைப்படம் கீழே காணப்படுகின்றது.
Battinews Link | Archived Link
மேலும் Iritty பாலத்தில் காணப்படும் இரு மதில்களும் கல்லடி பாலத்தில் காணப்படவில்லை.
மேலும் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கல்லடி பாலமானது 1924 ஆம் ஆண்டு அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக விக்கிப்பீடியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடுதலில் மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இணையத்தில் பகிரப்படும் புகைப்படமானது Iritty பாலத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்டம் என கண்டறியப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இணையத்தில் பகிரப்படும் புகைப்படமானது Iritty பாலத்தின் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

Title:மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படமா இது?
Fact Check By: Nelson ManiResult: False