ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் வெள்ளநீர் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?

Misleading இலங்கை | Sri Lanka

INTRO :
இலங்கையில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையில் வெள்ளநீராக காட்சியளிக்கும் ராணவ எல்ல நீர்வீழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Arasiyal Ragasiyam – அரசியல் ரகசியம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”  மலையகப் பகுதியில் அடை மழை !!

பெருக்கெடுத்து பொங்கிப் பிரவகிக்கும் ராவண எல்ல நீர்வீழ்ச்சி !!

நன்றி : Ceylon Magazine “ என இம் மாதம் 02 ஆம் திகதி 02.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த புகைப்படங்களை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2020 ஆம் ஆண்டு dailymirror பத்திரிகையின் இணையத்தளத்தில் குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

குறித்த புகைப்படங்கள் பிரசன்ன பத்மசிறி என்ற நபரால் எடுக்கப்பட்டு dailymirror இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, இந்த நாட்களில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட ராவண நீர்வீழ்ச்சியின் புகைப்படங்கள் சமீபத்தியவை அல்ல என்பதோடு அது ஒரு வருடத்திற்கு முன்பு என்பதை உறுதிப்படுத்துகின்றன.

A picture containing calendar

Description automatically generated

Dailymirror.lk | Archived

நாம் குறித்த இணையத்தில் பகிரப்படுகின்ற கனமழைக்குப் பிறகு ராவணன் நீர்வீழ்ச்சி எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்டும் காணொளியும் சமீபத்திய வீடியோவில் வெளியிடப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

எனினும், குறித்த காணொளியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 திகதி யூடியூப்பில் வெளியிடப்பட்டதை அங்கே பார்த்தோம்.

Archived

மேலும் நாம் குறித்த பதுளை மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் உதவி இயக்குநரிடம் விசாரித்தபோது, ​​ராவணன் நீர்வீழ்ச்சி சாதாரணமாக நிலையில் காணப்படுவதாகவும், எந்த ஆபத்து நிலையும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் வெள்ளநீர் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பகிரப்படுபவை பழைய புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் வெள்ளநீர் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *