பஹ்ரைன் நாட்டு மன்னரின் மெய்க்காப்பாளரான ரோபோ என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Mohan Mohan என்ற பேஸ்புக் கணக்கில் ” பஹ்ரைன் மன்னர் தனது ரோபோ மெய்க்காப்பாளருடன் துபாய் வருகிறார். 4 வது தொழில்துறை புரட்சி பற்றி பேசுங்கள்.

இதற்கு 6 மொழிகள் பேச முடியும். அது அவரை கும்பல்களிடமிருந்து கொண்டு செல்ல முடியும். இது உடல் ரீதியாக போராடலாம், துரத்தலாம், சுடலாம். இது ஒரு மின்சார டீஸர், வெளியிடப்படாத 360 டிகிரி கேமரா அமைப்பு அகச்சிவப்பு கேமராக்களின் இரண்டாம் நிலை, 1050 ஆண்களுடன் சண்டையிட போதுமான வெடிமருந்துகளுடன் 3 மறைக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் மற்றும் லேசர் வழிகாட்டப்பட்ட துப்பாக்கி சுடும் இயந்திர துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மருந்துகள் மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்கிறது

காவலரின் விலை சுமார் 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்” என்று கடந்த மாதம் 14 ஆம் திகதி (14.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக ஆய்வினை மேற்கொண்ட போது குறித்த வீடியோவில் உள்ள தரைவிரிப்பில் ‘ETIMAD’ என்ற சொல் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த சொல்லை கொண்டு நாம் கூகுள் தேடு தளத்தில் ETIMAD robot என்று தேடிய போது, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு வீடியோ எமக்கு கிடைத்தது.

அது ”அபுதாபியில் இடம்பெற்ற ஐக்கிய அரபு நாடுகள் பாதுகாப்பு கண்காட்சியில் 8 அடி உயரமான டைடன் ரோபோ“ என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

நாம் டைடன் ரோபோ குறித்தான செய்திகள் எதும் வெளியாகியுள்ளதா என்று தேடிய வேளையில், khaleejtimes.com என்ற இணையத்தளத்தில் மற்றும் அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியுள்ளமை காணக்கிடைத்தது.

khaleejtimes.com | Archive Link

மேலும், நாம் குறித்த வீடியோவில் வரும் நபர் பஹ்ரைன் நாட்டு மன்னரா என்று ஆராய்ந்த வேளையில் அது பஹ்ரைன் நாட்டு மன்னரான Hamad bin Isa Al Khalifa இல்லை என்பது எம்மால் உறுதி செய்யப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பஹ்ரைன் மன்னரின் மெய்க்காப்பாளரான ரோபோ என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வீடியோ அபுதாபியில் இடம்பெற்ற கண்காட்சியில் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெளிவாகிறது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இந்த ரோபோ பஹ்ரைன் மன்னரின் மெய்க்காப்பாளரா?

Fact Check By: Nelson Mani

Result: False