பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம் செய்தார்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Ruthram FM என்ற பேஸ்புக் பக்கத்தில் ”சர்சுக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை, 5 பங்குத் தந்தைகள், மிரட்டி கூட்டாக கற்பழித்த விடயம் கேரளாவையே நடு நடுங்க வைத்துள்ளது. திருவனந்த புரம் அருகே உள்ள, பத்தநாம் திட்டா என்னும் இடத்தில் உள்ள ஒரு சர்சுக்கு பாவமன்னிப்பு கேட்க்கச் சென்றுள்ளார் மெர்சி என்னும் பெண். ஏற்கனவே திருமணமாக முன்னர் இவரை ஒரு பாதிரியார், பாழாக்கி இருந்தார்.

இதனை எப்படியோ அறிந்து கொண்ட அங்கே இருந்த பாதிரி ஒருவர். உண் கணவரிடம் இதனை சொல்லிவிடுவேன் என்று மிரட்டி. 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அவரை வரவளைத்துள்ளார். பின்னர் அங்கே தனது நண்பர்களான 4 பாதிரியாருடன் சேர்ந்து மேர்சியை இவர்கள் கூட்டாக கற்பழித்துள்ளார்கள்.

இதனை வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவரது கணவரிடம் ஒரு, இக்கட்டான சூழ் நிலையில் தான் மேர்சி தெரிவித்துள்ளார். கணவன் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து, திருச்சபையினர் அந்த 5 பாதிரிகளையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது ஒரு புறம் இருக்க. பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஹோட்டல் சென்ற விடையம் முதல் கொண்டு அனைத்தையும் பொலிசார் கண்டு பிடித்து வருகிறார்கள்.” என்று இம்மாதம் 1 ஆம் திகதி (01.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)


நாம் குறித்த தகவலை கண்டறிய Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்ட வேளையில், டாக்டர் அஞ்சு ராமச்சந்திரன் என்பவர் இந்து பெண் என்று தெரிந்தது. பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண் என்று சமூக ஊடகங்களில் டாக்டர் அஞ்சுவின் படத்தை தவறாக பகிரப்பட்டதும், அது தொடர்பாக டாக்டர் அஞ்சு போலீசில் புகார் செய்த தகவலும் நமக்குக் கிடைத்தது.

News link | Archived Link

பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம். குறித்த தேடலின் போது, இந்த படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது. படத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தது. படத்தில், மும்பையில் உள்ள ஒரு தேவாலயத்தின் அதிபராக இருந்த Msgr Nereus Rodrigues, Bishop John Rodrigues, Oswald Cardinal Gracias, Archbishop Salvatore pennacchio, Bishop Dominic fernandes, Fr Aniceto Pereira என தெரிந்தது.

Image Url | Archived Link

மேலும் கடந்த வருடம் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பாரதியார்களில் 4 பேரின் புகைப்படத்தினை புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

மேலும் குறித்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதோடு அது தற்போது நடந்தவை போல இலங்கையில் பகிரப்பட்டு வருகின்றது.

பாலியல் குற்றச்சாட்டில் தொடர்பில்லாத பெண், பாதிரியார்கள் புகைப்படத்தை வெளியிட்டு, தவறான படத்தை பரப்பியிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் குறித்த ஆய்வு தொடர்பாக மேலதிக தகவல்களை பெற எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இதற்கமைய பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிவித்து பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படமானது போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

இதற்கமைய பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிவித்து பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படமானது போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் கூட்டு பலாத்காரமா?

Fact Check By: Nelson Mani

Result: False