கறுப்பின நபரின் மகள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் ஜோ பைடன்?

False சர்வதேசம் | International

INTRO :

உலகமே வியந்து பார்த்த விடயம் என்றால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். அதில் போட்டியிட்ட ஜோ பைடன், பொலிஸாரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சட்டத்தரணி க.பார்த்தீபன் பார்த்தா என்ற பேஸ்புக் கணக்கில் ” ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளையின அமெரிக்க போலீசாரால் கழுத்து நெரித்து பகிரங்கமாக கொலை செய்யப்பட்டமை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது😳😳😳😳(புதிய உலகான அமெரிக்காவில் ஜரோப்பியர் குடியேறியமை சுமார் 500 வருடங்களிற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது) குறித்த இறந்த கறுப்பின நபரின் மகளான அச் சிறுமி முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோபைடன்..உண்மையில் நீங்கள் சிறந்த உன்னத மனிதர் தான்😘😘”  என இம் மாதம் 01 ஆம் திகதி  (01.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

அத்தேடலின் போது, ஜோ பைடனின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி குறித்த புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து, அதில் ‘’Our children are a constant reminder of why I’m in this fight.

We need to build an economy that gives them and their families a fair shot.

We need to root out systemic racism so they grow up in a more just nation than we have now.

We need to combat climate change so there’s a world left for them to thrive in.

I believe in a better future for our children and will fight for them until the very end,’’ என பதிவிட்டுள்ளார்.

Instagram | Archived link 

மேலும் இது குறித்து நாம் தேடுதல் மேற்கொண்ட போது, Detroit Free Press என்ற இணையத்தளத்தில் தனது பேரப்பிள்ளைகளுக்காக ஆடைகள் வாங்க சென்றபோது என்ற ஓர் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள பிள்ளையிடம் போத்தல் ஒன்றை கையளிக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில் கடை உரிமையாளரின் மகன் என்று பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதற்கமைய இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள பிள்ளையின் தந்தை ThreeThirteen என்ற கடையின் உரிமையாளர் என கண்டறியப்பட்டுள்ளது.

Detroit Free Press | Archived link

நாம் மேற்கொண்ட தேடலில் கறுப்பின நபரின் மகள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் ஜோபைடன் என பகிரப்பட்ட தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கறுப்பின நபரின் மகள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் ஜோ பைடன்?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *