கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இறந்த இருவரை இந்தியாவில் அடக்கம் செய்தாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Thooimai1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Two Muslim victim of the Covid 19 in India that the Janaza had been cremating according the Muslims 's ordained in our faith not like Sri Lanka's burning Janaza (body) method இந்தியாவில் கூட கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு இறந்த 2 ஜனாசாக்கலை அடக்கம் செய்வதை காணலாம் ஆனால் இலங்கையில் எரித்து தகனம் செய்யப்பட்டுள்ளது” என்று இம் மாதம் 1 ஆம் திகதி (01.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தில் பதியப்பட்டிருந்த Watermark ஐ வைத்து குறித்த புகைப்படத்தின் உரிமையாளரை நாம் தேடி கண்டுபிடித்தோம்.

குறித்த புகைப்படத்தின் உரிமையாளரான Rahul ravi அவர்களின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் குறித்த புகைப்படம் இருப்பதை நாம் அவதானித்தோம்.

குறித்த புகைப்படத்தில் என்ன பதியப்பட்டுள்ளது என்று நாம் தேடிய போது,

மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவதற்காகவே குறித்த புகைப்படத்தினை தாம் எடுத்ததாகவும், அரசாங்கம் சொல்லுகின்ற படி நடக்காவிடில் கடைசியில் மரணம் தான் நிகழும் என்று தெரிவித்துள்ளார்.

Instagram link | Archived Link

மேலும் இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொச்சி பிரதேச பதிப்பில் வெளிவந்த செய்தியில் இது மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என Rahul ravi பத்திரிக்கையிற்கு தெரிவித்துள்ளார்.

Newspaper Link | Archived link

குறித்த ஆய்வின் போது இது முஸ்லிம்களின் ஜனாசாக்கள் இல்லை என்பதோடு, இது புகைப்படத்திற்காக ஏற்பாடு செய்யது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

மேலும் குறித்த கணக்கினை நாம் சோதனை செய்த போது குறித்த புகைப்படத்திற்கு அவர்கள் தயார் ஆகும் வீடியோ பதிவு காணக்கிடைத்தது.

குறித்த சடலம் போல் இருவர் நடித்துள்ளமை இதிலிருந்து தெரியவந்துள்ளது.

இதை பயன்படுத்தி இலங்கையில் தற்போதுள்ள நிலமையினை வைத்து தவறான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ள உறுதி செய்யப்படுகின்றது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 முஸ்லீம்களின் ஜனாசாக்கலை அடக்கம் செய்துள்ளனர் என்று மக்கள் மத்தியில் தவறான செய்தியினை பரப்பியுள்ளனர்.

எமது வாசகர்களே இதுபோன்ற தவறான செய்திகள்,புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 முஸ்லீம்களின் ஜனாசாக்கலை அடக்கம் செய்துள்ளனர் என்று மக்கள் மத்தியில் தவறான செய்தியினை பரப்பியுள்ளனர் என்று உறுதியாகிறது.

Avatar

Title:இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 சடலங்கள் அடக்கம்; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False