கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினை நினைத்து இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Newlankanews என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டிற்காக அழுத முதல் ஜனாதிபதி...!

கண்கலங்க வைத்த செய்தி..! அழுகிற இத்தாலியின் ஜனாதிபதியைப் பாருங்கள்.” என்று இம்மாதம் 23 ஆம் திகதி (23.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் செய்தோம், குறித்த புகைப்படம் கீழ் பதியப்பட்டிருந்த கமெண்ட்டுக்களை பார்வையிட்டோம் அதில் குறித்த பலர் இது போலியான தகவல் என்று பதிவேற்றம் செய்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

நாம் இத்தாலியின் ஜனாதிபதி யார் என்று தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில்,

Sergio Mattarella என்பரே அந்நாட்டில் ஜனாதிபதி என்று கண்டறியப்பட்டது.

குறித்த பேஸ்புக் பதிவில் உள்ளவர் இவர் என்பதை நாம் உறுதிசெய்துக்கொண்டோம். எனவே இத்தாலியின் ஜனாதிபதி என்று வேறொருவரின் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றமை எம்மால் உறுதி செய்யப்பட்டது

குறித்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என்பதை கண்டறிய நாம் மேற்கொண்ட சோதனையின் போது அவர் பிரேஸினில் ஜனாதிபதி Jair Bolsonaro என கண்டறியப்பட்டார்.

மேலும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்த குறித்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

அதன்போது, குறித்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று எம்மால் உறுதி செய்ய முடிந்தது.

மக்கள் முன்நிலையில் ஒரு உரை நிகழ்த்தும் போது பிரேசிலின் ஜனாதிபதி கண்ணீருடன் உரை நிகழ்த்தியுள்ளமை கண்டறியப்பட்டது.

இதுதவிர, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் குறிப்பிடுவதுபோல இத்தாலி பிரதமரோ, அதிபரோ கண்ணீர்விட்டு கதறி அழுததாக எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

ஏற்கனவே இது குறித்த எமது இந்திய பிரிவின் தமிழ் குழு மேற்கொண்ட உண்மை தேடல் பரிசோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து கிடைத்த ஆதாரங்களின்படி பலரும் மக்கள் அச்சத்தில் உள்ள நேரத்தில் தமது கற்பனைக்கு ஏற்றவாறு பல்வேறு போலியான தகவல்களை பரப்பி மக்களை மேலும் அச்சத்திற்கு கொண்டு செல்லுகின்றனர். அதனை மற்றவர்களும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் தவறானது என்று உறுதியாகிறது.

Avatar

Title:நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதாரா?

Fact Check By: Nelson Mani

Result: False