சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் தற்போது ஆயிரக்கணக்கில் உயிரினை பழிவாங்கியுள்ளதோடு, இன்னும் உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

சுட சுடசெய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #தமிழனின் வரலாறு மீண்டும் திரும்புகிறது.... தமிழர்களின் பெருமையை நிலை நாட்டிய #யாழ்ப்பாணத்து #தமிழச்சி #கிருஷா கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து சாதனை.....

வாழ்த்துக்கள் தோழி..... ” என்று இம்மாதம் 2 ஆம் திகதி (02.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் வைரஸ் போன்ற அமைப்பினை காட்டும் ஓர் புகைப்படமும் இணைத்து வணக்கம்JAFFNA என்ற இணையத்தள முகவரியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் ஆய்வில் இதுவரை காலத்திற்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு எவ்விதமான தடுப்பு மருந்தும் கண்டுபிடித்ததாக உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை.

who.int | Archived Link

குறித்த பதிவு பதிவேற்றம் செய்யப்பட்ட 2 ஆம் திகதி (02.02.2020) உலக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வ அறிக்கையில், சமூகவலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான போலியான தகவல்கள் பகிரப்படுவதால், அவைகுறித்து எமது தொழில்நுட்ப பிரிவினர் அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர், என்று தெரித்துள்ளனர்.

who.int | Archived Link

மேலும் குறித்த புகைப்படத்தில் இருந்த பெண் வைத்தியர் புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில் எமக்கு எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.

Google Search

இந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் குறித்த தகவல் போலியானது என உறுதி செய்துள்ளனர்.

குறித்த அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் எமது இந்திய தமிழ் பிரிவினர் குறித்த தகவல் போலியானது என முன்னதாகவே தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்த யாழ்ப்பாணத்து தமிழச்சி என பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Avatar

Title:கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தாரா யாழ்ப்பாணத்து தமிழச்சி?

Fact Check By: Nelson Mani

Result: False