ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Yazh News - யாழ் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

விரிவான செய்திக்கு...👉https://bit.ly/3gfke43

Join our WhatsApp News! Send 'START' to +97474746361

#yazhnews ” என்று இம்மாதம் 20 ஆம் திகதி (20.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த இணைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இணைய முகவரியில் பதியப்பட்டிருந்த செய்தியில், நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

News Website | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக அரச சேவை, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, எல்லா மாகாணங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகவும், தற்போது பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதற்கமைய அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.

இதற்கமைய அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பா?

Fact Check By: Nelson Mani

Result: False