
INTRO :
இம்முறை நடந்த கல்வி பொது தர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளில் புள்ளிகளுக்கான மதிப்பெண் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Northern Province Teachers வட மாகாண ஆசிரியர்கள் என்ற பேஸ்புக் கணக்கில் ” 2021 சாதரணதர புள்ளியிடல் முறை
#nptechers
copied” என இம் மாதம் 03 ஆம் திகதி (03.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது குழுவினர் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது, இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புள்ளிகளுக்கான மதிப்பீட்டு தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை, என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக எங்கும் அவர்கள் அறிவிக்கவில்லை என தெரிவித்ததோடு, இது செயற்படுத்துவதற்கு கேபினட் அமைச்சின் அனுமதி பெறுதல் வேண்டும் என்றும் அவ்வாறான நடவடிக்கைகள் இது வரை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
அவரின் கருத்திற்கு அமைய இதுவரை பரீட்சைகள் மதிப்பெண் தொடர்பாக எவ்விதமான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியில்லை என எமது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எமது தேடலுக்கு அமைய, 2021 சாதாரண தர புள்ளியிடல் முறை என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.