
இலங்கையில் பதிவு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் கையொப்பம் முக்கியம் என புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Suthan Vijay என்ற பேஸ்புக் கணக்கில் ” காதலித்து ஒடி போய் கல்யாணம் பண்ணுபவர்களுக்கு
இனி ஆப்பு ✍️
பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியம்
புதிய சட்டம்👌” என்று இம் மாதம் 05 ஆம் திகதி (05.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக நாம் திருமண பதிவாளரான பிரின்ஸி வர்ணகுலசூரிய அவர்களை தொடர்புக்கொண்டு வினவிய போது,
குறித்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவ்வாறு எவ்விதமான சட்டங்களும் புதிதாக பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கை தலைமை பதிவாளர் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இதுதொடர்பாக நாமும் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது, பேஸ்புக்கில் பகிரப்படுவதை போன்று எவ்விதமான புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.

இதற்கமைய பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியம் என வெளியான செய்தி போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.