மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் மக்கள் குதூகலித்தனரா?

உலகம்

இந்திய பிரதமர் மோடி படியில் இடறி விழுந்த வீடியோவை பார்த்து குதூகலிக்கும் மக்கள் என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்படுகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.facebook.com-2019.12.21-08_55_53.png

Facebook Link | Archived Link 

எதிரொலி job vacancies என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் குதூகலிக்கும் மக்கள்..” என்று  கடந்த 15 ஆம் திகதி (15.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவில் ஒரு வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த வீடியோவிலிருந்து ஓர் ஸ்கிரின் ஷாட் (screenshot) எடுத்து அதை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.

C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.google.com-2019.12.21-09_20_41.png

Google Search Link

குறித்த தேடலின் போது, இதுபோன்று பல போலி தகவல்கள் குறித்த வீடியோவினை வைத்து வடிவமைக்கப்பட்டிருப்பதை காணக்கிடைத்தது.

எங்கள் ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய தமிழ் பிரிவும் ஏற்கனவே குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது குறித்து நாம் தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில், குறித்த வீடியோவானது பிரிஸ்டலின் ஆஷ்டன் கேட் மைதானத்தில் அமைந்துள்ள ஓர் மதுபான சாலையில் ரசிகர்கள் யூரோ 2016 இல் வேல்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றியடைந்ததைக் கொண்டாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவாகும்.

முதலாவது வீடியோ

இரண்டாவது வீடியோ

https://youtu.be/QPn-5L_7EQA

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் குதூகலிக்கும் மக்கள் என பரப்பப்படும் வீடியோ 2016 ஆம் ஆண்டு வேல்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றியடைந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

Avatar

Title:மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் மக்கள் குதூகலித்தனரா?

Fact Check By: Nelson Mani 

Result: False