INTRO :
இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link
virakesari.lk | Archived link

virakesari.lk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி” என இம் மாதம் 09 ஆம் திகதி (09.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடக மையத்தினை தொடர்புகொண்டு வினவிய போது, இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை, என தெரிவித்தனர்.

மேலும் நாம் சுகாதார அமைச்சுக்கு இது தொடர்பாக தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்களும், இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை இது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது, என தெரிவித்தனர்.

இது தொடர்பாக citizen இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

citizen.lk | Archived link

குறித்த சம்பவம் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பாக நாம் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது, நேற்றைய தினம் சில ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியினை அடிப்படையாகவும், மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவரின் குரல் பதிவு ஒன்றும் வெளியாகியிருந்ததாகவும் அதன் பின்னர் நீதி அமைச்சரை தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக மக்களுக்கு அறியப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தமை பேரில் மையமாகக் கொண்டு குறித்த ஊடக அறிக்கையினை அவர்கள் வெளியிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது குறித்த ஊடக அறிக்கை சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமையால் நீக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Archived link

மேலும் நேற்றைய (09.11.2020) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் இது குறித்தான எவ்வித செய்தியும் உள்ளடங்கி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.news.lk | Archived link

இதேவேளை நீதி அமைச்சர் அலி சப்ரி அததெரண ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில், கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

adaderana | Archived link

மேலும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளரான வைத்தியர் ஜய ரூவான் இது போலியான தகவல் என்றும், இன்னும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Youtube Link | Archived Link

வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா வைரஸினால் மரணிப்பவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவும் செய்தி முற்றிலும் போலியானது என தெரிவித்துள்ளார்.

மேலும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இது தொடர்பாக தமது விளக்கத்தினை பதிவு செய்துள்ளனர்.

Ceylon Thawheed Jamath - CTJ Link | Archived Link

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading