கடந்த 2016 ஆம் ஆண்டு பகிரப்பட்ட ஹஜ்ரத் ஆதமின் கால் அடி,கபுர் மற்றும் அவர் அணிந்த ஆடை என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்புகைப்படம் மீண்டும் பேஸ்புக்கில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Mohamed Mujahit என்ற பேஸ்புக் கணக்கில் ”இந்த படத்தில் இரிப்பது ஹஜ்ரத் ஆதம் (அலைஹி வஸ்ஸலாம்) அவர்களின் கால் தடம் அவர்களின் கபுர் மற்றும் அவர் அனிந்த ஆடை சுபுஹானல்லாஹ் மாஷா அல்லாஹ். ” என்று கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் திகதி (19.06.2016) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தின் கீழ் பதியப்பட்ட Comments ஐ முதலில் ஆய்விற்கு உட்படுத்தினோம்.

அதில் ஒருவர் இது பொய்யான புகைப்படம் என்று தெரிவித்துள்ளார், மேலும் சிலர் இது குறித்து தங்களின் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த புகைப்படத்தின் பாத அடியினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடலின் போது இது தெற்கு ஆச்சேவில் உள்ள இராட்சத கால்தடங்களின் மர்மம் என்று தலைப்பில் வெளியான செய்தி இணைப்புக்களை காட்டியது.

நாம் அதை மேலும் ஆய்விற்கு உட்படுத்தினோம்,

Article Link | Archived Link

இந்தோனேசியாவின் தபக்துவான் நகரத்தின் தெற்கு ஆச்சே கடற்கரையில் அருகில் அமைந்துள்ள ஒரு பாறையின் மீது குறித்த கால் அடித்தளம் அமைந்துள்ளது.

மேலும் புராணத்தின் படி,குறித்த கால் தடமானது தபா என்ற மாபெரும் சந்நியாசி உடையதாகும் என நம்பப்படுகின்றது. முழு அறிக்கை

கபுர் என்று அடுத்த புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

கபுர் என்றால் என்ன?

கபுர் என்ற வார்த்தையினை நாம் கூகுள் தேடலில் தேடினோம். அதன் அடிப்படையில் கபுர் என்றால் இறந்த பின்னரான வாழ்க்கையினை குறிக்கின்றது.

News Link | Archived Link

அதன்படியில் பேஸ்புக் பகிரப்படும் ஆதமின் கபுர் என்ற புகைப்படத்தின் உண்மையினை கண்டறிய நாம் கூகுளில் The grave of prophet Adam என தேடுதலில் ஈடுப்பட்டோம்.

அதில் கிடைக்கப்பட்ட வீடியோவினை நாம் சோதனை செய்தோம்,

Youtube link

குறித்த வீடியோ பதிவிற்கு கீழே பலர் இது ஆதாம் நபியின் கல்லறை இல்லை என்றும் இது இம்ரான் நபியின் கல்லறை என்று தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நாம் கூகுளில் Grave of Prophet Imran என தேடினோம்,

ஆதாமின் கபுர் என பகிரப்பட்ட புகைப்படம் Grave of Prophet Imran என்ற தேடலில் கிடைக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த கல்லறையானது இம்ரான் நபியுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பதிப்பில் இருந்த கடைசி புகைப்படமான ஆதாம் நபியின் ஆடை தொடர்பாக மேற்கொண் சோதனையில், குறித்த ஆடையானது ஆதாம் நபியை பற்றி குரானில் கூறப்பட்டுள்ள அளவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். முழு அறிக்கை

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஆதாம் நபியின் கால் தடம், அவரின் கபுர் மற்றும் அவர் அணிந்த ஆடை என்று பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:ஆதாம் நபியின் கால் பாதம், கபுர் மற்றும் ஆடையா இது?

Fact Check By: Nelson Mani

Result: False