
கொரோனா ஒரு தேசிய பிரச்சினை – கோட்டபாய ராஜபக்ச என்ற தலைப்பில் விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Mohamd Asnaf என்ற பேஸ்புக் கணக்கில் ”
கொரோனா ஒரு தேசிய பிரச்சினை- கோடாபய ராஜபக்ச
முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது
இறந்தவர்களின் உடல்களை எரித்தே ஆக வேண்டும்
முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்பதற்காக நாட்டுக்கு பாதகமான விடயங்களிள் என்னால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது கொரோனா ஒரு தேசிய பிரச்சினை இதன் மூலம் இறப்பவர்களை எரிப்பதே சிறந்த தெரிவு முஸ்லிம்களின் உடலை எரிப்பது சம்மந்தமாக என்னை பேசும்படி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ரிசாத்,ஹக்கீம் கூறுகின்றனர் இது என்னால் முடியாத காரியம் முஸ்லிம்களை விட அதிகமாக இந்துக்களும், பௌத்தர்கள்களும் எனக்கு வாக்களித்து உள்ளனர்(பக்கம் 3)”
என்று இம் மாதம் 16ஆம் திகதி (16.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி சஜித் பிரேமதாசவின் பெயரிலும் பலராலும் பரப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த இரு பதிவுகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் பத்திரிக்கை வெளியான திகதி மறைக்கப்பட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் ஒரே செய்தி இருவர் பெயரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளமால் வெளியாகிருந்தமை குறித்த செய்தி போலியானது என்று மேலும் எமக்கு உறுதியளித்தது.
தொடர்ந்து நாம் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த விடிவெள்ளி பத்திரிக்கையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை நாம் பரிசோதனை செய்த போது குறித்த செய்தி போலியானது என்று செய்தி வெளியிட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்து.
குறித்த செய்தியில் ” விடிவெள்ளி பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை போலியாக வடிவமைத்து பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வாசகர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பில் எமது நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
எமது பத்திரிகை தொடர்பில் ஏதேனும் போலிச் செய்திகளை வாசகர்கள் காணுமிடத்து, எமது மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் பகிருமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். – ஆசிரியர் ” என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த இரு பதிவுகளும் போலியானது என்று தெரிவித்துள்ளமை காணக்கிடைத்தது.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி என தெரிவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட விடிவெள்ளி முகப்புப் பக்கத்தின் புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் தெரிவித்ததாக, விடிவெள்ளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்தி போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:ஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False