
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உரையாடியதாக கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Puratchi SL என்ற யூடியுப் கணக்கில் ” இலங்கை சஜித் பிரேமதாசவை பற்றி ரஜினிகாந்த் உரையாடல் (ஆங்கில மொழிபெயர்பு) ” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி (07.11.2019) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்ட வேளையில் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்த தமது ரசிகர்கள் மத்தியில் உரையாடிய காணொளியின் ஒரு பகுதியினை எடுத்து அதற்கு மேல் ஒலிச் சேர்க்கை (Dubbing) செய்துள்ளமை காணக்கிடைத்து.
Original Video
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரித்து ரஜினி உரையாடியதாக வெளியான காணொளி புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில் புதிய தலைமுறை தொலைகாட்சியின் Watermark பதியப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
போலியான வீடியோ

உண்மை வீடியோ

மேலும் புதிய தலைமுறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சுமார் 17 நிமிடங்கள் கொண்ட காணொளியில் 7:30 என்ற நிமிடத்திலிருந்து 8:19 நிமிடம் வரையும், 9:23 நிமிடம் முதல் 10:11 நிமிடம் வரையும் இரு வீடியோ பகுதிகளை வெட்டி எடுக்கப்பட்டு அதை இணைத்து அதற்கு dubbing செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சஜித்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினி என கூறப்பட்டு வெளியாகியுள்ள வீடியோ ஒலி சேர்க்கை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.