
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில் ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்!
1. ராஜித சேனரத்ன
2. சதுரா சேனரத்ன
3. விஜித் விஜயமுனி சோய்சா
4. சுனில் ஹண்டுன்னெட்டி
5. நிரோஷன் பிரேமரத்ன
6. லட்சுமன் யபா அபேவர்தன
7. வஜிரா அபேவர்தன
8. நலிந்த ஜெயதிஸ்ஸா
9. பாலிதா தேவரப்பெருமா
10. சுசாந்தா புஞ்சினிலமே
11. நவீன் திசனாநாயக்க
12. ரவி கருணநாயக்க
13. ரனில் விக்ரமசிங்க
14. தயா கமகே
15. அகிலா விராஜ்
16. அசோக் அபேசிங்க
17. ஜெ. சி
18. பாலிதா ரேஞ்ச் பண்டாரா
19. பிமல் ரத்நாயக்க
20. மனோஜ் சிறிசேன
21. ஹிருனிகா பிரேமச்சந்திரா
22. அர்ஜுன ரணதுங்க
23. ருவன் விஜேவர்தன
24. அ. எச். எம். ஃபோஸி
25. கருணாரத்ன பரணவிதனா
26. தலதா அத்துகோரல
27. அமீர் அலி
28. அப்துல்லாஹ் மஹ்ரூப்
29. மனோ கணேசன்
30. அலி சாஹிர் மௌலானா
31. M. A. Sumanthiran
32. மாவை” என்று இம் மாதம் 7 ஆம் திகதி (07.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தோம். குறித்த தேடுதலின் போது, களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ராஜித சேனரத்ன மற்றும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட மனோ கணேசன் ஆகிய இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
களுத்துறை மாவட்டத்தில் 448,699 வாக்குகளை பெற்ற இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு 8 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்தி 171,988 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றி இருந்தன.
இதில் ஐக்கிய மக்கள் சார்பாக போட்டியிட்ட ராஜித சேனரத்ன 77,476 வாக்குகள் பெற்று களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Adaderana link | Archived link
மேலும் கொழும்பு மாவட்டத்தினை நாம் ஆய்வு செய்த போது, கொழும்பு மாவட்டத்தில் 674,603 வாக்குகளை பெற்ற இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு 12 ஆசனங்களும், 387,145 வாக்குகளை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தியிற்கு 6 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் 62,091 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை எமக்கு உறுதி செய்யப்பட்டது.


Adaderana link | Archived link
இன்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறித்த வர்த்தமானி அறிக்கையில் ராஜித சேனர்தன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரின் பெயரும் உள்ளடங்கியிருந்தமை காணக்கிடைத்தது.


இதற்கமைய நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜித சேனரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.