
INTRO :
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த ரிக்ஷா வண்டி ஓட்டுனர் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிளந்த
ரிக்ஷா வண்டி ஓட்டுனர்😥😥😥.” என இம் மாதம் 08 ஆம் திகதி (08.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
அதன் போது, குறித்த புகைப்படமானது 4 வருடங்களுக்கு முன்னர் Steemit என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மதுபோதையில் தூங்கும் ரிக்ஷா ஓட்டுனர் என பதிவிட்டு 4 வருடங்களுக்கு முன்னர் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
கொரோனா பரவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே ஆரம்பமாகிய நிலையில் இந்த புகைப்படம் கொரோனாவினால் மரணித்தவர் என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தில் இந்தியாவில் கொல்கத்தா போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பெயர் தென்பட்டமையால் எமது இந்திய பிரிவினரை கொண்டு விசாரித்த போது இது குறித்தான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த ரிக்ஷா வண்டி ஓட்டுனர் என பரவிய தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த ரிக்ஷா வண்டி ஓட்டுனரா?
Fact Check By: Nelson ManiResult: Misleading