INTRO :
குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் இன் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட செளமியா தேசாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

பேஸ்புக் கணக்கில் ” குஜராத் மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் ன் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட செளமியா தேசாய் கடந்த 5:10:2021 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காண காரணத்தை வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நான் 8 வயதில் சாகா (ஆர் எஸ் எஸ்) வகுப்பில் இணைந்தேன். அன்றுமுதல் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை கடைபிடிக்கத்தொடங்கினேன். நாட்டில் ஒரு முஸ்லீமிற்கு துன்பம் ஏற்பட்டால் அதை நினைத்து சந்தோசபடுவேன். பல நிகழ்வுகளைக்கண்டு சந்தோசமடைந்திருக்கிறேன்.

சாகா வகுப்பில் எங்களுக்கு இஸ்லாமியர்களின் குர் ஆன் என்று ஒரு புத்தகம் கொடுக்கபட்டது. அதில் முஸ்லீம்கள்,கிறஸ்தவர்கள் பற்றிய பொய் தகவல்கள் அதிகமிருந்தன.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது சாகாவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் சொல்லியிருப்பது எப்படி உண்மையாக இருக்க முடியும் உலக அளவில் இஸ்லாம் வளர்ந்திறுக்கின்றது எப்படி என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

பிறகு இஸ்லாமிய மதகுருமார்கள் சிலரை சந்தித்து விபரம் அறிந்துகொண்டேன். அதன் பின் இஸ்லாமியர்களின் உண்மையான குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். சமத்துவத்தையும்,சகோதரத்துவத்தையும் போதிக்கும் மதம் இஸ்லாம் என்று உணர்ந்துகொண்டு என்னை இஸ்லாத்தின்பால் இணைத்துக்கொண்டேன் என்கிறார்.

இஸ்லாம் மட்டுமல்ல தங்களுக்கு பிடித்த மதத்தை ஏற்றுக்கொள்வதென்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் மதவெறியை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்ககூடிய ஒரு தீவிரவாத அமைப்பிலிருந்து ஒருவர் வெளிவருகிறார் என்றால் அதைப்பற்றி பேசத்தான் வேண்டும்.

செளமியா தேசாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் இஸ்லாத்தை ஏற்ற ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் இவரும் சொல்லியிருக்கிறார். “ என இம் மாதம் 22 ஆம் திகதி (22.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த பதிவில் இருந்த இரு புகைப்படங்களையும் தனித்தனியே நாம் ஆய்விற்கு உட்படுத்தினோம். முதலில் இருந்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்ட போது, 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தி அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்தமையினால் பல பெண்கள் தற்பாதுகாப்பு பயிற்சிகளில் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எமது மலையாள பிரிவினர் குறித்த புகைப்படக்கலைஞரான Nitin Kanotra-ஐ தொடர்புகொண்டு இதனை உறுதி செய்துள்ளனர்.

globaltimes.cn | Archived Link

குறித்த பதிவிலிருந்த இரண்டாவது புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்தபோது, குறித்த பெண் தொடர்பான உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் 2017 ஆம் ஆண்டு யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு வீடியோவில் குறித்த புகைப்படமும் அடங்கியிருந்தமை காணக்கிடைத்தது.

அதற்கமைய குறித்த புகைப்படமானது பழைய புகைப்படம் என உறுதி செய்யப்பட்டது.

மேலும், சௌமியா தேசாய் இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எமது மலையாள பிரிவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஆர்.எஸ்.எஸ் இன் பெண் சிங்கமான செளமியா தேசாய் இஸ்லாத்தை ஏற்றார் என பகிரப்படும் புகைப்படம் மற்றும் குறித்த செய்தியும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது மலையாள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஆர்.எஸ்.எஸ் பெண் சிங்கமான செளமியா தேசாய் இஸ்லாத்தை ஏற்றாரா?

Fact Check By: S G Prabu

Result: False