அடக்கத்தளத்தின் மீது விஷேட இரகசிய குறியீடு; ஜப்பானில் புதிய தொழிநுட்பமா?

False சர்வதேசம் | International

INTRO :
ஜப்பானில் ஒவ்வொரு அடக்கத்தளத்தின் மீது விஷேட இரகசிய குறியீடு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link

பேஸ்புக் கணக்கில் ”  மரணித்து அடக்கப்பட்டபின்

ஜப்பானில் புதிய தொழிநுட்பம்..

ஒவ்வொரு அடக்கஸ்த்தளத்தின் மீதும்

விஷேட இரகசிய குறியீடு பொருத்தப்பட்டிருக்கும்.

அக்குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது

மரணித்தவரது புகைப்படம்

அவரைப்பற்றிய தகவல்கள்

அவரது முழு வாழ்க்கை வரலாறும்

காண்பிக்கப்படும்.

تكنولوجيا جديدا ما بعد الموت في اليابان .. !

قبور اليابانيين مزودة بكود QR خاص لكل قبر ، يعرض لك صور ومعلومات وسيرة مختصرة عن حياة الميت !!

Technology after death in Japan..! 

The graves of the Japanese are equipped with a special QR code for each grave,

showing you pictures, information and a brief biography of the life of the dead!!

Translated By :- A.M.M.Harsook (Rawahi) “ என கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி 28.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் குறித்த புகைப்படத்தினை அவதானித்தபோது, இது ஜப்பானிய மொழியல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. இதில் காணப்படும் மொழி சீன மொழியினை ஒத்திருந்தது.

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2015 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த இணையச்செய்தினை நாம் ஆய்வு செய்த போது, இரண்டாம் உலக யுத்தத்தின் போது மரணித்தவர்களின் நினைவாக பதிக்கப்பட்ட நினைவு தூபி ஆகும்.

மேலும் இது theme park Foreigner Street in Southwest China’s Chongqing municipality என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த QR குறியீடினை ஸ்கேன் செய்தி அதில் மரணித்தவர்களுக்கு இணையத்தின் வழி மெழுகுவர்த்தி ஏற்றல், பூ வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இது நான்ஜிங் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட நினைவு தூபி ஆகும்.

ecns.cn | Archived Link

குறித்த செய்தி சீனாவின் முன்னனி செய்தி இணையத்தளங்களிலும் பதிவாகி இருந்தமை காணக்கிடைத்தது.

China Daily | China.org.cn

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், அடக்கத்தளத்தின் மீது விஷேட இரகசிய குறியீடுகள் ஜப்பானில் புதிய தொழிநுட்பம் என்று பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அடக்கத்தளத்தின் மீது விஷேட இரகசிய குறியீடு; ஜப்பானில் புதிய தொழிநுட்பமா?

Fact Check By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *