இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானாரா ?

Uncategorized

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என ஒரு செய்தி காட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ”  இதய அஞ்சலி….

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் காலமானார்.உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார் “ என இம் மாதம் 18 ஆம் திகதி (18.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு நிமிர்த்தமாக இந்தியாவின் டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

மேலும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றும் டெல்லி எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thehindu.com | Archived

சமூக வலைத்தளங்களில் மன்மோகன் சிங் குறித்து பலரும் வதந்தி பரப்பவே தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தன்னுடைய உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங் உடல் நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டு, டுவீட் வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.

Archived Link

நாம் மேலும் மேற்கொண்ட தேடலுக்கு அமைய 2021 ஒக்டோபர் 18 ஆம் திகதி வரையில் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுதான் வருகிறார். அவர் உடல் நலம் சீராக உள்ளது என்று எய்ம்ஸ் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு


எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

Avatar

Title:இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானாரா ?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.