INTRO :
சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜுலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்கும் என சமூக வலைத்தளங்கள் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே *அல்பெலியன் நிகழ்வு* என்று அழைக்கப்படுகிறது. இது ஜூலை 4 காலை 5-27 மணிக்கு தொடங்கும்.

Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம். இது ஆகஸ்ட் 22 இல் முடிவடையும்.

இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம். நமக்கு உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 90,000,000 கி.மீ. ஆனால் இந்த Alphelion Phenomenon காலத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 152,000,000 கி.மீ ஆக அதிகரிக்கும். அதாவது 66% அதிகரிப்பு.

தயவுசெய்து இதை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சத்துள்ள உணவு உண்டு ஆரோக்கியத்தைப் பேணிக்

கொள்ளுங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏 “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவை நாம் கூகுளில் தேடிய போது, தோராயமாக, 150 மில்லியன் கிலோமீற்றர். இதனையே மைல் கணக்கில் பார்த்தால் 93,000,000 மைல்கள் ஆகும். ஆனால் குறித்த பதிவில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 90,000,000 கிலோமீற்றர் தூரம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Space.com

இது மட்டுமின்றி, Aphelion Phenomenon என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த காலக்கட்டத்தில், இவர்கள் கூறுவது போல, சூரியனில் இருந்து, பூமி அதிக தொலைவுக்குப் செல்லாது, மாறாக சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் தான் விலகிச் செல்லும். அது, அண்ணளவாக 152.6 மில்லியன் கிலோமீற்றர் மட்டுமே. இது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு அவ்வளவு தான்.

இதே போல, Perihelion Phenomenon எனவும் ஒன்றுள்ளது. அப்போது, 147.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் வகையில், பூமி சூரியனை நோக்கி நெருங்கிச் செல்லும். இது, ஜனவரி மாதத்தில் ஏற்படும்.

இதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பார்த்தால், இந்த Aphelion Phenomenon காலக்கட்டத்தில், பூமியில் கால வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இது இயல்பாக ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வுதான்.

NASA Link 1 I NASA Link 2

ஆண்டுதோறும் இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்வை எடுத்து, எதோ விசித்திரமானதாகச் சித்தரித்து மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளமை கண்டறியப்பட்டது.

எமது தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழியில் விரிவான ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Fact Crescendo Malayalam I Fact Crescendo English I Fact Crescendo Tamil

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சூரியனை விட்டு பூமி தூரம் செல்வதால் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்குமா?

Fact Check By: S G Prabu

Result: Misleading