INTRO :
கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை மரணித்துள்ளதாக என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!

எடைகுறைவால் சிசு உயிரிழந்தது

பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் இரண்டு நாட்களாக காத்திருந்த ஹற்றனை சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த தாயை அங்கு சேவையில் இருந்த இராணுவத்தினர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். எடை குறைவாக பிறந்த குறித்த பெண் சிசு தற்போது உயிரிழந்துள்தாக கொழும்பு காசல் மருந்துவமனையின் மகப்பேற்று நிபுணர் வைத்தியர் சனத் லனரோல் தெரிவித்தார். “ என கடந்த மாதம் 07 ஆம் திகதி (07.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நேற்று (07.07.2022) காலை பத்தரமுல்லவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண் பல நாட்களாக வரிசையில் காந்திருந்ததாகவும், குறித்த பெண் கழிவறைக்கு செல்லும் போது தனக்கு பிரசவ வலி ஏற்பட்டு அந்த இடத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.

குறித்த காரியாலயத்தில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் அவரை பொரளை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தியை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அந்த சந்தர்ப்பத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் வைரலானமை குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/PrabodaYatagama/status/1544914302477426688?s=20&t=A8iFaGCBGHPLCGaGroVQqw

எவ்வாறாயினும், பிரதான ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டு, தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தன. Link1 | Link 2 | link 3

கடவுச்சீட்டு வரிசையில் இருந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிர் இழந்ததாகவும், எடை குறைவாக இருந்தமையே அதற்கு காரணம் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டிருந்தமை எம்மால் அவதானிக்க முடிந்தது.

ஆனால் குறித்த குழந்தை பொரளை காசல் வைத்தியசாலையில் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் எதிலும் குழந்தை இறந்ததாக தெரிவிக்கவில்லை.

இதனை நாம் உறுதி செய்துக்கொள்ள பொரளை காசில் வைத்தியசாலையில் (நேற்றிரவு சுமார் 10 மணியளவில்) விசாரணை செய்தோம். அப்போது, பொரளை காசல் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்ததாக வெளியான செய்திகள் பொய்யானது எனவும், குழந்தை தற்போது வைத்தியசாலையின் குறைமாத சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை உயிரிழந்ததா?

Fact Check By: S G Prabu

Result: Misleading