INTRO :
பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள் என ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்களோடு செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

புதுசுடர் என்ற பேஸ்புக் கணக்கில் “ ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ள நிலையில், மீண்டும் தலிபான்களின் அட்டூழியங்கள் அரங்கேறியுள்ளதா என்ற மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க படைகளால் கைவிடப்பட்ட அதிநவீன பிளாக்ஹாக் ஹெலிகாப்டரை இயக்கிய தலிபான்கள் அதில் மனித உடலை தொங்கவிட்ட நிலையில் பறந்துசென்றுள்ளனர். இது குறித்த காணொளிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கபடைகள் நேற்று முழுவதும் வெளியேறியது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படையினர் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.

https://puthusudar.lk/.../%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%95%e0.../ “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.09.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, பல ஊடகங்கள் இது உண்மையென செய்தி பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் இது குறித்தான ஆய்வின் போது, தாலிபான்கள் கந்தகார் அரசு கட்டிடத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் தாலிபான்கள் கொடியை ஹெலிகாப்டர் உதவியுடன் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என்று சில வீடியோக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பகிரப்பட்டு வருவதும் நமக்குக் கிடைத்தது.

Facebook Link | Archived Link

இது தொடர்பாக எமது ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு வெளியிட்ட செய்தியைப் பார்த்த போது, குறித்த வீடியோவினை பதிவு செய்த Tabassum வானொலியின் தலைமை ஆசிரியரான Mr. Sadiqullah Afghan எமது குழு தொடர்புகொண்டு வினவியபோது,

தாலிபான்கள் ஹெலிகாப்டரில் யாரையும் தொங்கவிட்டு கொலை செய்யவில்லை என்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தாலிபான்கள் தங்கள் கொடியை கந்தகார் அரசு கட்டிட கம்பத்தில் கட்ட முயற்சி செய்ததாகவும் உறுதி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த ஊடகவியலாளரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “நான் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானியை தொடர்புகொண்டேன். அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். தாலிபான்கள் தங்கள் கொடியை கம்பத்தில் கட்ட முயற்சி செய்ததாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது எனவும் அவர் கூறினார்” என்று இருந்தது.

Archived Link

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள் என பகிரப்பட்ட வீடியோ தாலிபான் போராளி ஒருவர் உயரமான கொடிக் கம்பத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் கொடியை பறக்கவிட முயற்சி செய்த எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள் ; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False