INTRO :
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் “ என இம் மாதம் 26 ஆம் திகதி (26 .12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த புகைப்படத்தினை ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது BOKA Vanguard என்ற அழைக்கப்படும் கப்பல்களை தாங்கி செல்லும் கப்பல் என கண்டறியப்பட்டது.

இது தான் கப்பல்கள் மற்றும் மிகவும் பாரிய உலகத்தில் ஆன உபகரணங்களை கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல் என்றும் இது 2012 ஆம் ஆண்டு முதல் தனது சேவையினை வழங்கி வருவதாக தெரியவந்தது. மேலதிக தகவலுக்கு

இது குறித்தான வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

மேலும் நாம் The world's largest cargo ship எது என்பதையும் தேடியபோது, அது எவர் கிரீன் கப்பல் என்பது எம்மால் கண்டறியப்பட்டது.

google.com

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள கப்பல், கப்பல் மற்றும் பாரிய உலோகத்தினால் ஆன பொருட்களை கொண்டு செல்லும் கப்பல் என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுவா?

Fact Check By: S G Prabu

Result: Misleading