INTRO :
இலங்கையில் அமையவுள்ள கொழும்பு துறைமுக நகரத்திற்கான கடவுச்சீட்டு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Madhavi Velmurugan என்ற பேஸ்புக் கணக்கில் “ சீனாவின் புதிய காலனி நாடான இலங்கைக்கு புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்திய சீனா அரசு! ” என இம் மாதம் 23 ஆம் திகதி (23.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இந்த கடவுச்சீட்டு புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது இது ஹாங் காங் (Hong Kong) நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் என உறுதியானது.

Graphical user interface, application, Word  Description automatically generated

Wikipedia | Archived

ஜூலை 1 ஆம் திகதி, 1997 அன்று சீனாவிற்கு இறையாண்மை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சீன மக்கள் குடியரசின் மத்திய மக்கள் அரசின் அனுமதியுடன் ஹாங்காங்கின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு ஆகும்.

ஹாங்காங்கின் உத்தியோகபூர்வ மொழிகள் சீன மற்றும் ஆங்கிலம் என்பதால், கடவுச்சீட்டும் சீன (பாரம்பரிய எழுத்துக்கள்) மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருமொழியாக அச்சிடப்படுகிறது.

இதன் உண்மைத்தன்மையினை உறுதிசெய்ய நாம் இலங்கைக்கான சீன தூதரதகத்தில் அரசியல் பிரிவின் தலைவரை தொடர்புக்கொண்டு வினவிய போது இது ஹாங்கொங் நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு புகைப்படம் என தெரிவித்தார்.

மேலும், கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரவேசிப்பதற்கு எவ்விதமான கடவுச்சீட்டினையும் சீன அரசாங்க வழங்கவில்லை என தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தின் மக்கள் தொடர்பாடல் உத்தியோகஸ்தரிடம் இது குறித்து வினவிய போது இது முற்றிலும் போலியான தகவல் என எமக்கு தெரிவித்தார்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கொழும்பு துறைமுக நகரத்திற்கான கடவுச்சீட்டு என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொழும்பு துறைமுக நகரத்திற்கான கடவுச்சீட்டா இது?

Fact Check By: Nelson Mani

Result: False