INTRO :
அம்பாறை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் அடங்கிய செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Rafeek A Gafoor என்ற பேஸ்புக் கணக்கில் இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர் ,அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

👉🚨இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் அம்பாறை பகுதியில் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இந்த கருப்பு பூஞ்சை பரவிய விதம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இது பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் மற்றும் சுவாசக் குழாயை கடுமையாக சேதப்படுத்தும் மற்றும் மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.” என இம் மாதம் 23 ஆம் திகதி (23.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இந்திய ஊடக அறிக்கையின்படி, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரும் மற்றும் கொரோனா நோயிலிருந்து மீண்ட ஒரு குழுவினர் கருப்பு பூஞ்சை (மியூகோமைகோசிஸ்) பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிக இறப்பு விகிதம் இருப்பதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன. கருப்பு பூஞ்சை (மியூகோமிகோசிஸ்) குறித்த அறிக்கைக்கு இங்கே கிளிக் செய்க

இந்த செய்தியைத் தொடர்ந்து, இலங்கையில் அம்பாறை வைத்தியசாலையில் கருப்பு பூஞ்சை நோயாளி இறந்துவிட்டதாக, ஊடக அறிக்கைகள் வெளியாகின.

நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுகொண்டிருந்தபோது அவர் பலியானார்.

இந்த செய்தியை தொடர்ந்து, அம்பாறையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இருப்பினும், அம்பாறை பொது வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் உபுல் விஜேநாயக்க நோயாளி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை, ஆனால் மற்றொரு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தில் உள்ள நபர் பூஞ்சை தொற்று காரணமாக இறந்துவிட்டாரா என்று டாக்டர் உபுல் விஜேநாயக்கரிடம் கேட்டோம். புகைப்படத்தில் உள்ள நபர் அம்பாறை நோயாளி அல்ல என்பதை வைத்தியர் உறுதிப்படுத்தினார்.

குறித்த புகைப்படம் இந்தியாவில் பலர் பகிர்ந்து கொண்டதை நாங்கள் கண்டறிந்தோம். பரிமாறிக்கொள்ளப்பட்ட குறிப்புகளில் ஒன்று இங்கே. இருப்பினும், நோயாளி இருக்கும் இடத்தை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இலங்கை வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கரும் பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு 42 பேருக்கும், 2020 ஆம் ஆண்டு 24 பேருக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டிள் இதுவரையில் 24 பேருக்கும் கரும் பூஞ்சை நோய் இருப்பது இனங்காணப்பட்டுள்ளனர் என விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவர்களில் எவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கருப்பு பூஞ்சை நோயாளர் அம்பாறை பகுதியில் அடையாளம் காணப்பட்டார் என பகிரப்படும் புகைப்படம் அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோயாளர் அல்ல.

மேலும் கொரோன தொற்று நோயால் மரணித்த நோயாளிக்கு கருப்பு பூஞ்சை நோய் அல்லது மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் அல்ல. அவர் மரணித்தது வேறு ஒரு பூஞ்சை நோயால் என கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கருப்பு பூஞ்சை நோயாளர் அம்பாறை பகுதியில் அடையாளம் காணப்பட்டாரா?

Fact Check By: Nelson Mani

Result: Misleading