INTRO :
திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

CWF QATAR என்ற பேஸ்புக் கணக்கில் “ திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் பொருட்காட்சியகத்தில் உள்ளது. “ என இம் மாதம் 26 ஆம் திகதி (06.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் குறித்த படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, gettyimages இணையதளத்தில் இப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

அதில் குறித்த படத்தில் உள்ள நபர் தன்சானியாவில் உள்ள சான்சிபார் நகரினை 1893 முதல் 1896 காலப்பகுதியில் ஆட்சி செய்த சுல்தான் சேயிட் ஹேமட் பின் துவைன் (sultan Seyyid Hamed bin Thuwain) என கண்டறியப்பட்டது.

gettyimages | Archived Link

இவர் தொடர்பில் நாம் கூகுளில் தேடிய போது, சான்சிபாரில் 1857 ஆம் ஆண்டு பிறந்த இவர் அவரின் மச்சானினால் நஞ்சு வைத்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. wikipedia

உண்மையான திப்பு சுல்தானின் புகைப்படத்தினை நாம் கூகுளில் தேடிய போது gettyimages இணையத்தளத்தில் பதியப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்து.

gettyimages | Archived Link

இரு புகைப்படங்களையும் நாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியாவில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் புகைப்படத்திற்கு பதிலாக சான்சிபாரை ஆட்சி செய்த சுல்தான் சேயிட் ஹேமட் பின் துவைன் (sultan Seyyid Hamed bin Thuwain) என்பவரின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.


நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படம் என பகிரப்படும் புகைப்படமானது, சான்சிபாரை ஆட்சி செய்த சுல்தான் சேயிட் ஹேமட் பின் துவைன் (sultan Seyyid Hamed bin Thuwain) என்பவரின் புகைப்படம் ஆகும்.

Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படமா இது?

Fact Check By: Nelson Mani

Result: False