வைத்திய அதிகாரிகளின் சம்பளம் மாதமொன்றில் 2 இலட்சத்து 50 ஆயிரமா?

Misleading இலங்கை

INTRO :
வைத்திய அதிகாரிகளின் சம்பள பற்றுசீட்டு ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Sutharshan Siro என்ற பேஸ்புக் கணக்கில் “ தயவு செய்து எப்படியாவது Medical Officer ஆக வந்து விடுங்கள்..  இரண்டு மாதங்களில் குறைந்தது 4 இலட்சம் உழைத்திடலாம் “ என இம் மாதம் 04  ஆம் திகதி (04.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இந்த சம்பளப்பற்று சீட்டு களுத்துறை வைத்தியசாலையில் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளமையினால் எமது குழு குறித்த வைத்தியசாலையில் பொறுப்பு வைத்தியரை தொடர்புக்கொண்டு இது குறித்து விபரத்தினை கேட்டது.

அப்போது குறித்த சம்பளச்சீட்டில் உள்ள மேலதிக வேலைக்கான மற்றும் விடுமுறை தின பணிக்காக இரண்டு மாதத்தின் கொடுப்பனவுகள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலதிக தகவலினை பெறுவதற்கு களுத்துறை வைத்தியசாலையில் கணக்கு பிரிவினை நாம் தொடர்புக்கொண்டு வினவிய போது, குறித்த சம்பள பற்றுசீட்டில் உள்ள கணக்கானது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மேலதிக வேலை நேரமாகிய 228 மணித்தியாலத்திற்கான கொடுப்பனவும் ஒய்வு நாள்கள் மாதம் ஒன்றுக்கு 3 நாள் வேலையின் அடிப்படையில் இரு மாதங்களுக்கான கொடுப்பனவுகளே அதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த சம்பள பற்று சீட்டானது, இரண்டு மாதங்களின் கூட்டுத்தொகை என்பது எமக்கு உறுதியானது.

மேலும் இது தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நடத்திய ஊடகச்சந்திப்பு.

மேலும் இந்த சம்பளம் தொடர்பாக சில வைத்திய அதிகாரிகள் அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்குகளில் விளக்கத்தினை வழங்கியுள்ளமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், வைத்தியர்களின் சம்பள பற்றுசீட்டு தொடர்பாக பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வைத்திய அதிகாரிகளின் சம்பளம் மாதமொன்றில் 2 இலட்சத்து 50 ஆயிரமா?

Fact Check By: Nelson Mani 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *