பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட பசறை பிரதேசத்தில் எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் பரப்பப்படுகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.facebook.com-2019.12.17-18_51_23.png
C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.facebook.com-2019.12.17-18_51_49.png
C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.facebook.com-2019.12.17-18_52_16.png
C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.facebook.com-2019.12.17-18_52_37.png

Facebook Link | Archived Link

Ųmāř Hāžāňi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை ( பசறை ) பிரதேசத்தில் வெளியான எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்களான புதையல்கள்!

"புதையல்கள் " 👇👇👇

தொல்லியல் களம் ( Archelogical Site ) என்பது, தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஒரு இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிக்கும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இங்கே கடந்த காலம் என்று குறிப்பிடுவது, வரலாற்றுக்கு முந்திய காலம்,வயலாற்றுக் காலம் அல்லது தற்காலமாக இருக்கலாம். இது தவிர,ஆய்வு செய்யப்படும் காலப்பகுதியையும், பயன்படுத்தும் கோட்பாட்டு அணுகுமுறையையும் பொறுத்துக் களம் ஒன்றின் வரைவிலக்கணம் மற்றும் புவியியல் எல்லைகள் பெரிதும் வேறுபடக் கூடும். "புதையல்கள், புதைகுழிகள்" போன்றவை காணப்படும் இடங்களும் இக் களத்துள் அடங்கும்.

பொதுவாகத் தொல்லியல் களமொன்றின் எல்லைகளை வரையறுப்பது மிகவும் கடினமானது. ஒரு களம் சில சமயங்களில் ஒரு குடியிருப்பைக் குறிப்பதாக இருக்கக் கூடும் ஆனால் தொல்லியலாளர்கள் இதனைச் சுற்றி மனித நடவடிக்கைகள் இருந்திருக்கக் கூடிய இடங்களின் எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். " பண்பாட்டு வள மேலாண்மை " என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தொல்லியல் தொடர்பில்,களத்தை, வளர்ச்சிக்காகக் குறித்த எல்லைகளுக்குள் அடக்க வேண்டியதாக இருக்கும். இது சில சமயங்களில் வசதியாகவோ அல்லது வசதியீனமாகவோ இருக்கலாம். இவ்வாறான வேலைகளிலும், குறிப்பிட்ட சான்றுகள் காணப்படும் இடத்தின் எல்லைக்கு வெளியேயும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தொல்பொருட்கள் அல்லது தொல்லியல் அம்சங்கள் இருப்பதைக் கொண்டே களங்களை அடையாளம் காணுதல் மரபு. அடுப்புகள், கட்டிடங்கள் போன்றவை பொதுவான தொல்லியல் எச்சங்களாகும். மனித நடவடிக்கைகளினால் விளைந்த ஆனால் வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்படாத " எலும்புகள், செதில்கள், விதைகள் " போன்ற உயிரியல் பொருட்கள்,உயிர் எச்சங்கள் முதலியனவும் தொல்லியல் களங்களில் பொதுவாகக் காணப்படுவனவாகும். தொல்லியல் வரலாறு " பழைய கற்காலம்,இடைக் கற்காலம் போன்றவை தொடர்பில்,சிறிய செதுக்கப்பட்ட கல்கூட ஆய்வுக்கு உரியதாக இருக்கும். " நிலத்தோற்றத் தொல்லியல் " தனித்தனியான மனித நடவடிக்கைகளைப் பரந்த சூழலியல் பிண்ணனியிலேயே நோக்குகிறது. இது,களங்களின் வரையறுக்கப்பட்ட எல்லை என்னும் கருத்துருவை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், நிலவியல் சார் தொல்லியலாளர்களும், சூழலியல் சார் தொல்லியலாளர்களும், மனித நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற ஆனால், ஒரு தொடர்ச்சியான,இயற்கையான நிலவியல் அல்லது கரிமப் படிவுகளை ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும்.

இந்த வகையில் "புதையல்கள்" எமது நாட்டின் விலை மதிக்க முடியாத புராதன செல்வங்களாகக் காணப்படுகின்றன.இதனை சட்டபூர்வமற்ற முறையில் ஒரு குறிப்பிட்ட தனி நபர் அல்லது குழு அல்லது பல குழுக்களோ ஒண்றிணைந்து அபகரிக்க நினைப்பது பாரியதொரு குற்றமாகும். தொல்லியல் எச்சங்கள் எமது நாட்டின் புராதன சிறப்பை உலகின் ஏனைய தேசங்களுக்கும் பறைசாற்றுகின்றது.அவை,இலங்கை அரசுக்கு மட்டுமே உரித்துடையனவாகும். தொல்லியல் சான்றுகளால் எமது நாட்டின் வரலாறு நிலைத்து நிற்கின்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் அதனைப் பார்வையிட வருகின்றனர்.இதன் மூலம் எமது நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிக்கின்றது.

" உனது மூளையும் உலகின் பொது அறிவுக் களஞ்சியமாக இருந்த போதிலும், நீ பிறந்த தாய் நாட்டின் வரலாற்றையோ,சிறப்புக்களையோ,உனது தாய் தேசத்தின் பாரம்பரியமான புராதன சிதைவுகள், சின்னங்களின் முக்கியத்துவத்தையோ சற்றும் அறியாதவனாக நீ இருந்தால் உனது தாய் தேசத்தின் வாக்குரிமையை நீ பெற்றிருந்த போதிலும் உனது தாய் தேசத்தின் ஓர் சுதந்திரமான பிரஜையாக மாட்டாய். ஏனெனில், உனக்கும்,உனது தாய் தேசத்திற்குமிடையே எதுவித தொடர்புகளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை " 👉👉👉 எகிப்திய தொல்பொருளியல் ஆய்வாளர் " கார்ணல்.ஆண்டோயி "

தொல்பொருளியல் முக்கியத்துவம் சார்ந்த இடங்களையும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களையும்,தொல்லியல் மரபுகளையும் பாதுகாக்க ஒண்றிணைவோம். தொல்லியல் எச்சங்களால் எமது நாட்டின் வரலாறு நிலைத்து நிற்கின்றது.இது இன்று,நேற்று வந்த மரபு அல்ல. " விஜயன் என்ற ஆரிய இனத்தவனின் வருகையோடு ஆரம்பித்ததாகும் "

INTERNATIONAL STUDENTS OF HISTORY ASSOCIATION,

1ST YEAR STUDENT OF ARCHEOLOGY DEPARTMENT,

EASTERN UNIVERSITY SRILANKA,

UMAR.HAZANI. ” என்று கடந்த மாதம் 8 ஆம் திகதி (08.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவில் பசறையில் கண்டு எடுக்கப்பட்ட தொல்பொருள் என 9 புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.

C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.facebook.com-2019.12.17-19_06_45.png
C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.google.com-2019.12.17-19_09_45.png

Google Search Link

குறித்த தேடலின் போது, நாம் கூகுளில் தேடிய புகைப்படம் 2013 ஆம் ஆண்டு ஜெருசலேமில் அமைந்துள்ள இஸ்ரேல் தொல்பொருட் காட்சியகத்தில் இடம் பெற்ற கண்காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.bullionstar.com-2019.12.17-19_13_42.png

குறித்த புகைப்படத்தினை ஒரு பகுதியினை மற்றும் வெட்டி புதிதாக பசறையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் எச்சங்கள் என்று வெளியான புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் மீதமுள்ள 8 புகைப்படங்களையும் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்திய வேளையில் அப்புகைப்படங்கள் இலங்கையில் பசறை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட தொல்பொருள் எச்சத்துடன் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Reverse Image Search Link

பதுளை மாவட்டத்தில் பசறையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் மண்சரிவு ஏற்பட்டிருந்தமை எமது ஆய்வில் தெரியவந்தது.

ஆயினும் குறித்த இடத்தில் தொல்பொருள் அகிழ்வு கிடைக்கப்பெற்றதாக எவ்வித செய்திகளும் எமக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பில் எமது சிங்களப்பிரவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கட்டுரையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பதுளை ( பசறை ) பிரதேசத்தில் வெளியான எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்களான புதையல்கள் கிடைக்கப்பெற்றதாக வெளியான தகவல் முற்றிலும் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:பசறை மண்சரிவில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Nelson Mani

Result: False