அமெரிக்காவின் B2  குண்டுவீச்சு விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாகபகிரப்படும் காணொளி உண்மையா ? 

False சர்வதேசம் | International


INTRO :

அமெரிக்காவின் B2  குண்டுவீச்சு விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):



facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ அமெரிக்காவின் பி 2 உயர் ரக விமானத்தை ஈரான் சுட்டு‌ வீழ்த்தியது

அமெரிக்காவின்‌ பி 2 விமானத்தை உலகின்‌ முதல் நாடு ஈரான்‌ என சீன அதிபர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு…

 

“என இம்  மாதம் 06  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (06.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ #அமெரிக்காவின் #Bomber B 2

#குண்டு #வீச்சு #போர் #விமானத்தை 

#ஈரான் #சுட்டு #வீழ்த்தியது 

அமெரிக்காவின் குருவி!! ஈரான் வீதிகளில் ஊர்வலம்🤣🤣😁😁“என இம்  மாதம் 05  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (05.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் மோதல் இடம்பெற்று வருகின்ற நிலையில்,அமெரிக்காவின் B2 என்ற குண்டுவீச்சு விமானத்தினை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சில காட்சிகள் இணையத்தில் வைரலாகின்றமை காணக்கிடைத்தது.

நாம் இதுகுறித்து சர்வதேச செய்தி நிறுவனங்கள் எதும் செய்தி வெளியிட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான செய்திகள் எதுவும் காணப்படவில்லை.

ஆகவே நாம் குறித்த இரு காணொளிகளையும் முறையாக ஆய்வு செய்தபோது, அதில் முதல் காணொளியில் B2 விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி வெடிக்கும் முன்னரே அதில் இருந்து நெருப்பு மற்றும் பூகை வெளியேறுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும் அதனை நாம் செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை உறுதியானது.

வாகனம் ஒன்றில் அமெரிக்காவின் B2 என்ற குண்டுவீச்சு விமானத்தினை கொண்டு செல்லும் காட்சியினை நாம் ஆய்வுசெய்த போது அதில் குறித்த விமானமானது பயணிக்கும் பாதையினை விட பெரிதாக காணப்படுகின்றது. இருப்பிணும் அதனை தாங்கி செல்லும் வாகனம் எவ்விதமான தடங்கலும் இன்றி பயணிக்கின்றமை அவதானிக்க கிடைத்தது. 

இதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழவே நாம் குறித்த காணொளியையும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அமெரிக்காவின் B2  குண்டுவீச்சு விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: அமெரிக்காவின் B2 குண்டுவீச்சு விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக பகிரப்படும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *