
உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்திற்கு இலங்கை ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Risha Risha என்ற பேஸ்புக் கணக்கில் ” எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 திகதி இலங்கையில் beech. Park தியேட்டர் போன்ற இடங்களில் இராணுவ பாதுகாப்பினை பலபடுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபாய அதிரடி அறிவிப்பு காதல் தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று நேற்று (13.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது பலராலும் பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்டிருந்தமையும் எமது அவதானத்திற்கு உட்பட்டது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஊடக பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பாக நாம் வினவினோம்.
குறித்த தொலைபேசி உரையாடலில் அவர்கள் காதலர் தினம் தொடர்பாக பேஸ்புக் பக்கங்களில் மற்றும் கணக்குகளில் பகிரப்படும் தகவல் போலியானது என்று தெரிவித்ததோடு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் முடிவுகள் எடுத்தால் தமது உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும், உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கையினையும் வெளியிடுவார் என்று தெரிவித்தனர்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் காதலர்கள் தினத்திற்கு தடை என வெளியான செய்தி போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.