இலங்கையில் நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை தேசிய கீதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் வாசுதேவ நாணயக்கார சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் என தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக செய்தி வெளியாகிருந்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Fast Gossip - ஃபாஸ்ட் கிசுகிசு என்ற பேஸ்புக் பக்கத்தில் “சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு” என்று இம்மாம் 20 ஆம் திகதி (20.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பதிவேற்றத்தில் Fast Gossip இன் செய்தி லிங்க்கும் இணைக்கப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த லிங்கினை பரிசோதனை செய்தோம்.

News Link | Archived Link

குறித்த செய்தியினை முழுமையாக வாசித்த போது, அதில் வாசுதேவ நாணயக்கார சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவை பொய்யானது எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த செய்தியின் தலைப்பில் ”சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. – வாசுதேவவின் முகநூல் பதிவு “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Link | Archived Link

இது குறித்து asianmirror இணையத்தளத்தில் வெளியான செய்தியில் வாசுதேவ நாணயக்கார தேசிய கீதம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தமது விளக்கத்தினை வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை தேசிய கீதம் தொடர்பில் வெளியான செய்தி போலியென நாம் மேற்கொண்ட ஆய்வு

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் ; வாசுதேவவின் முகநூல் பதிவு என்ற தலைப்பு பிழையானது என எமது ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் வேண்டும் என்று வாசுதேவ முகநூலில் பதிவிட்டாரா?

Fact Check By: Nelson Mani

Result: False Headline