கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரலை அடைவதற்கு முன் இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறார்.

அவர் தண்ணீரை அதிகம் குடித்து, வெதுவெதுப்பான நீர் & உப்பு அல்லது வினிகருடன் கலக்கினால் வைரஸ் நீங்கும் என தெரிவித்து சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Jaffna Jet என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா வைரஸ் நுரையீரலை அடைவதற்கு முன்பு அது நான்கு நாட்கள் தொண்டையில் இருக்கும், இந்த நேரத்தில் அந்த நபர் இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறார். அவர் தண்ணீரை அதிகம் குடித்து, வெதுவெதுப்பான நீர் & உப்பு அல்லது வினிகருடன் கலக்கினால் வைரஸ் நீங்கும். இந்த தகவலை பரப்புங்கள், ஏனெனில் இந்த தகவலுடன் யாரையாவது சேமிக்க முடியும்.” என்று இம்மாதம் 16 ஆம் திகதி (16.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)


உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் கலந்து தொண்டையினை அலசினால் தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். குறித்த முறை மருத்துவம் பல வருடங்களாக எமது முன்னோரிடமிருந்து பின்பற்றி வருகின்றனர். எனினும் குறித்த மருத்து முறை மூலம் கொரோனா வைரஸினை தடுக்க முடியும் என்பதற்கு எவ்வித விஞ்ஞான ரீதியான ஆதரங்களும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுவரையில் வெளியாகியுள்ள மருத்துவ ஆய்வறிக்கையின் மூலம் தொண்டையில் வைரஸ் நான்கு நாட்கள் நீடிக்கும் என்பதற்கு ஆதரங்கள் எமக்கு கிடைக்கவில்லை.

நாம் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பதிவாளரான டாக்டர். ஆஷன் பதிரனவை தொடர்பு கொண்டு வினவியபோது, இது தொடர்பாக எவ்விதமான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தார்.

மேலும் மேற்கொண்ட சோதனையில் உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலுக்கு அமைய, தண்ணீர் பருகுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும் அதேவேளை, இது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைய கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கு வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகத்தினால் தப்பலாம் என்று தெரிவித்து பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கு வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகத்தினால் தப்பலாம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Avatar

Title:கொரோனா வைரஸ்; வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகிக்கலாமா?

Fact Check By: Nelson Mani

Result: False