
INTRO :
கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக சில புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில் ” பத்திரிக்கை நிருபரை கொலை செய்யும் காவி பயங்கரவாதிகள் தப்ளிக் ஜமாத் மீது அவதூறை சுமத்திய காவி பயங்கரவாதிகள் இன்று கம்பமேளாவிற்கு அனுமதி கொடுத்து கொரோனாவை பரப்பிய அரசை கண்டித்த பத்திரிக்கை நிருபர் கொலை
இதுதான் ஜனநாயக செயலா?
மீடியாக்கள் இதுவரை இந்த நிகழ்வை வெளிகொண்டுவரவில்லை ” என கடந்த மாதம் 20 ஆம் திகதி (20.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஒரு சிசிடிவி வீடியோ பதிவும் இணையத்தில் பகிரப்பட்டு வருவது எம்மால் காணக்கிடைத்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பதியப்பட்டிருந்த சிசிடிவி வீடியோ பதிவிலிருந்து ஒரு screenshot எடுத்து அதை கூகுள் ரிவஸ் இமேஜ் இனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, indiatoday இணையத்தில் வெளியாகிருந்த ஒரு செய்தி எமக்கு காணக்கிடைத்தது.

Indiatoday link | Archived Link
இந்தியாவில் வடமேற்கு டெல்லியில் ரோகினி என்ற இடத்தில் Safdarjung வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் ஊழியரின் கணவர் குறித்த பெண் மீது கொண்ட சந்தேகத்தினால் கத்தி குத்து செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், டெல்லியில் கணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் படங்களை மீண்டும் தேடியபோது, குறித்த புகைப்படத்தினை தற்போது கும்பமேளா பற்றி பேசியதால் கொலை செய்யப்பட்ட பெண் என பகிர்ப்பட்டமை உறுதியானது.
இணையத்தில் பகிரப்படும் வீடியோவில் இருந்த டுவிட்டர் கணக்கினை கொண்டு அவரின் டுவிட்டர் பக்கத்தினை நாம் ஆய்வு செய்தோம்.
அதில், இந்தியில் பதிவிட்டு இருந்ததை நமது இந்திய தமிழ் பிரிவினர் மாற்றம் செய்து பார்த்த போது, “நான் உயிருடன் உள்ளேன். மிகவும் பாதுகாப்பாக என் வீட்டில் உள்ளேன். கொரோனா வழிகாட்டுதல் படி வீட்டில் உள்ளேன். நான் கொலை செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை ஏப்ரல் 18, 2021 அன்று அவர் பதிவிட்டிருந்தார்.
மேலும், அவரின் யூடியுப் அலைவரிசையில் இது குறித்து ஒரு வீடியோ பதிவினையும் அவர் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய கும்பமேளா பற்றிய உண்மைகளை பேசிய பெண் பத்திரிகையாளர் வீதியில் குத்திக்கொலைசெய்யப்பட்டார் என்று பரவும் தகவல் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கும்பமேளா பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?
Fact Check By: Nelson ManiResult: False