2025 ஆம் ஆண்டில் Fact Crescendoவின் உண்மைக் கண்டறியும் அறிக்கைகளின் விரிவான ஆய்வுத் தொகுப்பு!!

Insight சமூகம் | Society

2025 ஆம் ஆண்டில், இலங்கையில் நிலவிய அரசியல் சூழல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய செய்திகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்களை ஃபேக்ட் கிரஸண்டோ விரிவாக ஆய்வு செய்துள்ளது.

எனவே அந்த ஆய்வுகள் தொடர்பான ஓர் கண்ணோட்டம்

ஜனவரி

புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதனையடுத்து அரசியல் ரீதியில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்ட அந்தவகையில் எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்களின் உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..?

அதேபோன்று தகவல் திருட்டு மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

கொரோனா பரவிலின் தீவிரத்தின் பின் மீண்டும் HMPV நோய் உலகில் புதிதாக பரவுவதாக மற்றும் அதன் தொற்றுள்ள நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய தகவல் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

●     இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டாரா ?

●     சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

பெப்ரவரி

இந்த மாதத்தை பொறுத்தவரையில் இணையவழி மோசடிகள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன எனவே அவை தொடர்பில் பிரதானமாக நாம் மேற்கொண்ட ஆய்வுகள்

●     சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்!

●     பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள்

●     SCAM Alert:

●     பாடகி யோஹானி நேர்காணல் நிகழ்ச்சியில் உடனடியாக பணம் சம்பாதிக்கும்

புதிய அராசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிக விமர்சனங்கள் எழுந்த அதேவேளை அது தொடர்பில் பகிரப்பட்ட பல தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 20,000 தினால் அதிகரிப்பா…?

●     உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

கனேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்தினுள் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பகிரப்பட்டன அவற்றில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     கனேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர் குறித்து பரவும் பதிவுகளின் உண்மை என்ன?

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இறைப்பதம் அடைவதற்கு முன்னர் அவர் சுகவீனமுற்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் அறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்கண்டறியும் ஆய்வு

●     பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம்

மார்ச்

ஸ்டார் லின்க் (Starlink) சேவை இலங்கையில் செயற்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அது குறித்து சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட தவறான தகவல் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     Starlink சேவையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?

இந்த மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் மேற்கொண்ட ஆய்வுகள்

●     சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?

●     சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?

அதேபோன்று சமூகத்தில் பேசப்பட்ட மற்றுமொரு பிராதன விடயம் சிங்கள மொழி பாடசாலையில் படிக்கும் தமிழ் மாணவனுக்கு நிகழ்ந்த அநீதி என பகிரப்பட்ட விடயம் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ பிரத்தியேகமாக மேற்கொண்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?

மேலும் இம்மாதமும் மக்களை ஏமாற்றி பணமோசடிகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டும் இணையவழி மோசடிகள் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன எனவே அது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     அனைத்து பிரஜைகளும் மாதம் 750,000 ரூபா பெறும் திட்டம் தொடர்பில் பிரதமர் தெரிவித்தாரா?

●     ரமழான் நிவாரணப் பொதி

●     மகளிர் தினத்தை முன்னிட்ட

ஏப்ரல்

தேர்தல் காலப்பகுதியில் வடக்கில் தபால் வாக்குகள் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் குறித்து வெளியான தகவல் உண்மையா ?

முதலாம் பிரான்சிஸ் பாப்பரசர் இறைப்பதம் அடைந்ததன் பின்னர் புதிய பாப்பரசர் தேர்வில் அடுத்த பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் பெயர் உள்ளடக்கம் என பகிரப்பட்ட தகவல்கள் குறித்தும் புதிய பாப்பரசர் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டுவார் என மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அராசாங்கத்மின் ஆட்சி தொடர்பில் பகிரப்பட்ட பல தவறான தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

●     ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

சர்வதேச ரீதியில் பார்க்கும் போது மேடையில் பேசிக்கொண்டிருந்த ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்வதாக பகிரப்பட்ட தகவல் தொடர்பான ஆய்வு

●     மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

மே

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகவளவில் செல்லும் அறுகம்பையில் அவர்கள் அணியும் ஆடை தொடர்பாக பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டதாக பகிரப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டதனைத் தொடர்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் அது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்த உண்மைகள்.

●     ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

கெரண்டி எல்ல விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆயு்வு

●     கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என பரவும் காணொளி உண்மையா?

சர்வதேச அளவில் இந்தியா பாகிஸ்தான் மோதலை மையப்படுத்தி பகிரப்பட்ட தவறான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

●     இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் பரவும் காணொளிகள் உண்மையா?

●     பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் என பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

●     NPP வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதா

ஜுன்

சர்வதேச ரீதியில் நாடுகளுக்கிடையில் இடமபெற்ற போர் நிலைமைகளை மையப்படுத்தி பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

●     இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

●     ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

அதேபோன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பகிரப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

தற்போதைய அரசாங்கத்தின செயற்பாடுகள் என பகிரப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பில் மேற்கொண்ட உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?

●     ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?

●     ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

●     புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

ஜுலை

இந்த மாதத்தை பொறுத்தவரையில் செம்மணி புதைக்குழி அகழ்வு தொடர்பில் பகிரப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

புதிய கல்வி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அது தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன எனவே அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட ஆய்வு

●     புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?

மேலும் குருநாகல் வயல் வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசு தொடர்பில் பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மை கண்டறியும் ஆய்வு

●     குருணாகல் வயலில் மீட்கப்பட்ட சிசுவின்  தாய் வாக்குமூலம் வழங்கும் காணொளியா இது?

ரஷ்யாவில் சுனாமி தாக்கியதாக பகிரப்பட்ட காணொளி மற்றும் அஹமதாபாத் விமான விபத்து தொடர்பில் பகிரப்பட் தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     ரஷ்யாவை தாக்கிய சுனாமி என பகிரப்படும் காணொளிகள் உண்மையானவையா?

●     ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

ஆகஸ்ட்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

●  ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்டாரா பிரதமர் ஹரிணி..?

●     முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி என பரவும் வீடியோ உண்மையா..?

●     முன்னாள் ஜனாதிபதி ரணில் பிணையில் விடுதலையா..?

யாழ்ப்பாண நகரம் என விமானமொன்று பெயரிடப்பட்டதாக பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

●     “யாழ்ப்பாணம் நகரம்”என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்றிக்கு புதிதாக பெயரிடப்பட்டதா..?

செப்டம்பர்

HSBCவங்கி இலங்கையிலிருந்து முழுமையாக சென்றுவிட்டதாக தெரிவித்து பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட விரிவான ஆய்வின் விளக்கம்

●     HSBC வங்கி இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதா?

நாட்டையே உலுக்கிய எல்ல பேருந்து விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தவறான தகவல் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வறிக்கை

●     எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பா..?

ஆட்சி மாற்றத்தை கோரி நோபாள மக்களால் முற்கொள்ளப்ப்டட போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பான உண்மைக் கண்டறியும ஆய்வுகள்

●     நோபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாரா?

●     நேபாளத்தில் பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்கும் காணொளியின் உண்மை என்ன?

ரஷ்யாவின் புற்றுநோய்கான தடுப்ப மருந்தை உகளாவிய மக்களுக்கு ரஷயா இலவசமாக வழங்கப்போவதாக தெரிவித்து பகிரப்பட்ட தகவல் தொடர்பில் ஆமற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை

●     ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமா?

அக்டோபர்

அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபாய உள்ளிட்ட பிரதிவாதிகனை தற்போதைய அரசாங்கப் விடுவத்ததாக தெரவிக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வு

●     அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?

அதேபோன்று மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் வெற்றுப்பத்திரம் என தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மைக்கண்டறியும் ஆய்வு

●     மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது வெற்றுப் பத்திரங்களா?

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இறந்துவிட்டதாக பகிரப்பட்ட போலியான தகவல்.

●     இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானாரா…?

மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில தவறான தகவல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்கண்டறியும் ஆய்வு

●     ஹோட்டன் சமவெளியில் பூத்துக் குலுங்கும் “குறிஞ்சி மலர்களின்” காணொளியா இது?

●     city bus திட்டத்தினை தான் lanka metro transit என மாற்றினார்களா…?

●     கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?

●     அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாரா?

நவம்பர்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட தொடர்பில் பகிரப்பட்ட தவறான தகவல் மற்றும் அது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     நுகேகொடை பேரணிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களின் புகைப்படங்களா இவை?

திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்கண்டறியும் ஆய்வுகள்

●     திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்தல்!

●     இளங்குமரன் மற்றும் ரஜீவன் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனரா?

வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பகிரப்பட்ட தவறான தகவல்களின் உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

●     பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

சுவிட்ஸர்லாந்தின் விமானமொன்று இலங்கைக்கு முதற் தடவையாக வந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயம் மற்றும் 3I/ATLAS வால் நட்சத்திரத்தின் காணொளி என பெகிரப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவா?

●     3I/ATLAS வால் நட்சத்திரத்தின்  காணொளியா இது?

விளையாட்டு பக்கம் செல்லும் போது பாகிஸ்தானில் அலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

●     பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு என பகிரப்படும் காணொளி உண்மையா..?

மெலிஸா புயல் தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன எனவே அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

டிசம்பர்

இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல்வேறு தகவல்கள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்

●     “முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாரா?

●     கம்பளையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டும் புகைப்படம்  AI மூலம் உருவாக்கப்பட்டதல்ல!

பேரிடர் காலத்தில் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பான ஆய்வுகள்

●     காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியதா..?

●     இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் பாலம் கொண்டுவரப்பட்ட காணொளியா இது?

●     இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினாரா..?

●     அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

●     சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்க ஜேவிபி 500 கோடி நன்கொடை வழங்கியதா?

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை கோரி இடம்பெற்ற மோசடி

●     பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகளை கோரி பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் அவதானம்!

●     ஒவ்வொரு குடிமகனுக்கும் 100,000 ரூபா வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் போலியானது!

பேரிடரின் பின் அரசியல் களத்தில் இடமபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பான உண்மைக் கண்டறியும் ஆய்வுகள்

●     நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?

●     ரயில் பயணித்த போது சரிந்து வீழ்ந்த ரயில் பாதை என பகிரப்படும் காணொளி உண்மையா?

●     சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

இறுதியாக கிறிஸ்மஸ் நாட்களில் அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

●     அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம், நிதி மோசடிகள் மற்றும் பேரிடர் கால வதந்திககள் தொடர்பான உண்மையை கண்டறிவதில்  தீவிரமாகச் செயற்பட்டுள்ளது. தகவல்களைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வுக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.

தவறான தகவல்களை பரப்பி  மக்களை திசை திருப்புவது என்பது சமூகத்திற்கு நாம் செய்யும் பாரிய தவறான செயலாகும் எனவே அது குறித்து விழிப்புடன் செயற்பட்டு சமுதாயத்திற்குத் தெளிவான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் எப்போதும் முன்னின்று செயற்படும்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Avatar

Title:2025 ஆம் ஆண்டில் Fact Crescendoவின் உண்மைக் கண்டறியும் அறிக்கைகளின் விரிவான ஆய்வுத் தொகுப்பு!!

Fact Check By: Suji shabeedharan 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *