
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இறந்துவிட்டதாகக் கூறி, போஸ்டர் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
தகவலின் விவரம்:



ராக்குரிசி அம்மன் முந்தல் | Archived
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முரளிதரனின் மரண அறிவித்த போஸ்டர் போலியானதோடு, அதில் பதிவேற்றம் செய்துள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Google இல் முத்தையா முரளிதரனின் மரணம் குறித்து நாம் தேடிய வேளை அவர் இன்னும் உயிரோடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் முத்தையா முரளிதரன் கடந்த 8 ஆம் திகதி (08.09.2019) அன்று கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
அதன் உண்மை தன்மையினை நாங்கள் ஏற்கனவே பரிசோதனை செய்து வெளியிட்டிருந்தோம்.
புலிகள் தொடர்பில் எழுந்த போலியான தகவல்களை ஒட்டி, முரளிதரனை விமர்சிக்கும் வகையில் குறித்த மரண அறிவித்தல் போஸ்டர் வெளியிடப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமை எமது ஆய்வில் தெரியவந்தது.
முரளிதரன் மரணித்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்ட நாளுக்கு (08.09.2019) அடுத்த நாள் அதாவது 9ஆம் திகதி (09.09.2019) ஆதவன் செய்திகளுக்கு தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் தொலைபேசியின் ஊடாக கருத்து தெரிவித்திருந்த அவர்களின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. முழு அறிக்கை

எனவே,உயிரோடு இருக்கும் ஒருவரை மரணித்தவர் போல் சித்தரித்து போஸ்டர் வெளியிட்டமை தவறான செயல் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முத்தையா முரளிதரன் மரணித்து விட்டார் என்று பகிரப்படும் போஸ்டர் போலியானவை.

Title:முரளிதரன் மரணம்; பகிரப்படும் மரண அறிவித்தல் போஸ்டர் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False
