ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழையா?

False இலங்கை | Sri Lanka


சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான உண்மை அறியாமல் பகிரப்படுவதனால் பல்வேறு தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!

அந்த வகையில் தற்போது ஹிக்கடுவ புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

தமிழில் எழுதப்பட்ட இந்த வார்த்தை என்ன….

இலங்கையில் தமிழ் எழுதத் தெரியாத சில முட்டாள்கள் இருக்கிறார்கள்…

ஹிக்கடுவ… தமிழ் எழுத்துக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். என சிங்களத்தில் தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவு நேற்று (2025.09.02) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook | Archived Link

குறித்த பதிவில் ஹிக்கடுவையின் தமிழ் பெயர் எப்படியிருக்கு ப்ரெண்ட்ஸ் பொறிக்கவை என்று வைத்திருப்பார்களோ… என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.09.02) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஹிக்கடுவை ரயில் நிலையம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டதா என்பதைப் அறிய இலங்கை ரயில்வே திணைக்களத்தின் இணையதளத்தில் நாம் ஆராய்ந்தோம்,  எனினும் அத்தகைய திட்டம் எதுவும் செயற்படுத்தப்பட்டதாக எந்த தகவல்களும் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ், தனியார் துறையின் நிதி பங்களிப்புடன் நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும்  Dream Destination  திட்டம் நேற்று (2025.09.02) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

Star Garments இன் நிதியுதவியுடன் காலி தல்பே ரயில் நிலையத்தில் முதல் ரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகள் நேற்று (02) ஆரம்பமாகின, மேலும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் தலைமையில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் ,  ஹிக்கடுவ ரயில் நிலையத்தில் சமீபத்தில் எந்த புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை. 

மேலும் நேற்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்ட பணிகளின் புகைப்படங்களை பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

ஹிக்கடுவ ரயில் நிலையம்

மேலும் இது குறித்து அறிவதற்கு நாம் ஹிக்கடுவ ரயில் நிலையத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இது குறித்து வினவிய போது, அவ்வாறு எந்த புனரமைப்புப் பணிகளும் அண்மையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பெயர் பலகையில் எந்தவித தமிழ் எழுத்துப் பிழைகளும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

பிராந்திய செய்தியாலளர்கள்

இதேவேளை ஹிக்கடுவ ரயில் நிலையத்தில் அண்மையில் புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டனவா என நாம் அப்பகுதி பிராந்திய செய்தியாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியருந்தோம். 

இதன்போது அவ்வாறு ஹிக்கடுவ ரயில் நிலையத்தில் எந்த புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இன்னும் அந்த ரயில் நிலையம் பழைய தோற்றத்திலேயே இருப்பதாகவும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.

மேலும் நாம் குறித்த படத்தினை நன்கு கவனித்தால் அந்த புகைப்படம் போலியானது என்பது தெளிவாகின்றது. குறித்த புகைப்படத்தில் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களின் வடிவமைப்பில் பாரிய மாற்றங்கள் காணப்படுவதனை அறியமுடிகின்றது.

அத்துடன் அதில் தமிழில் எழுதப்பட்டுள்ள வார்த்தை முற்றிலும் பிழை என்பதுடன் மற்ற இரு மொழிகளின் எழுத்துக்களின் வடிவமைப்பை போன்று தமிழ் எழுத்துக்களின் வடிவமைப்பிலும் பாரிய மாற்றங்கள் காணப்படுவதனை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் குறித்த பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழை தொடர்பில் சமூக ஊடக பனர்கள் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

ஹிக்கடுவை ரயில் நிலையத்தின் தமிழ் சரியாக எழுதப்பட்ட படங்கள் பின்வருமாறு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

நாம் இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனவின் ஊடகச் செயலாளரிடம் வினவியிருந்தோம். இதன்போது, ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்னும் ஆர்ம்பிக்கப்படவில்லை எனவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் அவர் கூறினார். இருப்பினும், ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் புனரமைப்பானது, Clean SriLanka திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்  இலங்கை முழுவதும் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் Dream Destination  திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஹிக்கடுவ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் குறித்தும் நாம் வினவியபோது, அவர் அது குறித்து எமக்கு வழங்கிய தகவல்கள் பின்வருமாறு

கடந்த பெப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் காணொளியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று ஹிக்கடுவ ரயில் நிலையத்தின பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் எதுவும் காணப்படவில்லை.

மேலும் ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் தற்போதைய புகைப்படங்கள் கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் அவற்றை இணைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதாக பகிரப்பட்ட புகைப்படம் போலியானது என்பதுடன் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழையா?

Fact Check By: Suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *