
வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி பொய் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவுத்துள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

FAKE NEWS… வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி பொய்யானதாகும்.
– ஐ.தே.க. ஊடகப் பிரிவு என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2026.01.05 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு ஏதேனும் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் தேடுதலில் ஈடுபட்டபட்ட போது அவ்வாறான எந்த பதிவுகளையும் எம்மால் காணமுடியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சின் ஊடகப் பிரிவினால் மேற்குறிப்பிட்ட விதத்தில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளையும் காணக்கிடைக்கவில்லை.
மேலும் இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை என்பது எமது ஆய்வுகளின் மூலம் அறியமுடிந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பிரிவு
இந்த விடயம் தொடர்பில் உண்மையைஅறியும் நேக்கில் இவ்வாறான அறிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டதா என நாம் வினவியபோது, இது போலியான தகவல் எனவும் அவ்வாறான எந்த அறிவிப்புகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிடவில்லை எனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி பொய் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளதாக பகிரப்படும் செய்தி போலியானது என்பதுடன் அவ்வாறான எந்த அறிவிப்புகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிடவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு என பகிரப்படும் போலியான தகவல்!
Fact Check By: Suji shabeedharanResult: False


