Dialog நிறுவனம் பழைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறதா?

Scam இலங்கை | Sri Lanka

இலங்கையில் அதிகளவானோர் பயன்படுத்தும் டயலொக் சிம்மிற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

டயலொக் நிறுவனம் அவர்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கும், 5G சிம் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா மற்றும் Air Time  வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்று வட்ஸ்அப் ஊடாக ஒரு தகவல் பகிரப்பட்டது

மேலும் இதே தகவல் பேஸ்புக் ஊடாகவும் பகிரப்பட்டிருந்தமையை காணக்கிடைத்தது.

Facebook | Archived Link

இந்தச் சலுகை பழைய மற்றும் 5G சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளின் கீழ் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறு மாத சிம்மிற்கு 5GB, ஒரு வருடம் பழமையான சிம்மிற்கு 10GB மற்றும் 5G சிம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 20GB வழங்கப்படும் என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இவ்வாறான அறிவிப்பை உண்மையில் டயலொக் நிறுவனம் வெளியிட்டிருக்குமாயின் அது குறித்து அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு மற்றும் இணையத்தளம் என்பவற்றில் அறிவிக்கப்பட்டிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த அறிவிப்புகளையும் காணமுடியவில்லை.

மேலும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அவ்வாறான ஏதேனும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என நாம் ஆராய்ந்த போதும் இது தொடர்பான எந்த விளம்பரங்களையும் காணமுடியவில்லை.

எனவே மேற்குறிப்பிட்ட சலுகைகள் தொடர்பில் பகிரப்பட்ட குறுஞ்செய்தியில் காணப்பட்ட Link தொடர்பில் ஆராய்ந்த போது அது போலியான Link என்பதுடன் அது தற்போது நீக்கப்பட்டுள்ளமையையும் அறியமுடிந்தது.

Web Link

எனவே, இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களை உறுதிப்படுத்த டயலொக் நிறுவனத்தை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.  இதன்போது  மேற்கண்ட சமூக ஊடகப் பதிவு போலியானது என்றும், அவர்கள் அத்தகைய சலுகையை வழங்கினால், Dialog அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலம் அதை விளம்பரப்படுத்தும் என்றும் எமக்கு தெரிவித்தனர். அதன்படி, இந்த இணைப்பு ஒரு phishing  மோசடி என்பது உறுதியானது.

phishing  மோசடி என்றால் என்ன?

phishing என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஒன்லைன் கணக்குகளில் உள்நுழைவதாகும். உதாரணத்திற்கு, phishing மின்னஞ்சல் உங்கள் வங்கியில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.

phishing மெசேஜ்கள் அல்லது உள்ளடக்கம் பின்வருபவற்றைச் செய்யலாம்: 

  • உங்கள் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கேட்கலாம்.
  • இணைப்புகளைக் கிளிக் செய்யுமாறோ மென்பொருளைப் பதிவிறக்குமாறோ கேட்கலாம்.
  • நீங்கள் உபயோகிக்கும் சமூக வலைதளம், உங்கள் வங்கி, உங்கள் பணியிடம் போன்ற நற்பெயருள்ள நிறுவனங்களின் தோற்றத்தில் மோசடி செய்யலாம். 
  • குடும்பத்தினர், நண்பர் அல்லது உடன் பணிபுரிபவர் போன்ற உங்களுக்குத் தெரிந்தவரின் தோற்றத்தில் மோசடி செய்யலாம்.
  • ஒரு நிறுவனமோ உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரோ அனுப்பிய மெசேஜைப் போன்றே அச்சு அசலாகத் தோற்றமளிக்கலாம்.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பழைய டயலொக் சிம் வாடிக்கையாளர்களுக்கும் 5G சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதான பகிரப்படும் தகவல் போலியானது என்பதுடன், அதுவொரு phishing  மோசடி என்பதுவும் கண்டறிப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:Dialog நிறுவனம் பழைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறதா?

Fact Check By: Suji Shabeedhran  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *