இயக்குனர் பாரதிராஜா காலமானதாக பகிரப்படும் போலியான தகவல்!

False சர்வதேசம் | International


இயக்குனர் சிகரம் பாரதிராஜா காலமானதாக தெரிவித்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

FB | FB | FB | FB

Fact Check (உண்மை அறிவோம்)

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாரதிராஜா அவர்கள் காலமானார் என பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை தொடர்ந்து இது தொடர்பில் இந்திய மற்றும் உள்நாட்டு பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

எனினும் அவர் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.Link | Link

இயக்குனர் பாரதிராஜா, மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் தவறானது எனவும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “தகுந்த மருத்துவ ஆதரவுடன், அவரது உடல்நிலை அளவீடுகள் (Vital parameters) சாதாரண நிலையில் உள்ளன. பாரதிராஜாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் அவர் ஒத்துழைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா அவர் உடல் நிலை தொடர்பாக வெளியாகும் செய்தி உண்மையல்ல என்பதற்காக தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பினவருமாறு

மேலும் இந்த அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், அவர் குறித்து தவறான தகவல்கis பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா காலமானதாக பகிரப்படும் தகவல்கள் தவறானது என்பதுடன் மூச்சுத் திணரல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இயக்குனர் பாரதிராஜா காலமானதாக பகிரப்படும் போலியான தகவல்!

Fact Check By: Suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *