அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ? 

Altered விளையாட்டு | Sports


INTRO :

அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “”அடேய்! சானக & டீம்…

அவரு யார் என்று தெரியுமாடா?

அவர் எப்படிபட்ட துடுப்பாட்ட வீரர் என்று தெரியுமாடா?

இலங்கை அணியின் மகத்தான வெற்றிகளில் அவரின் பங்களிப்பு பற்றி தெரியுமாடா?

எத்தனை பௌலர்களை கிரிக்கெட் உலகில் இருந்து இல்லாமல் செய்தவர் என்று தெரியுமாடா?

அவர் துடுப்பாடும் போது எதிரணி வீரர்களும், ரசிகர்களும் கடவுளிடம் கையேந்துவர் அவரது விக்கட் விரைவாக வீழ்த்தப்பட வேண்டும் என்று…

அப்படிபட்ட அவரை அயர்லாந்தோட வெற்றிபெற கடவுளிடம் கையேந்த வைத்து விட்டிட்டீங்களடா பாவிகளா… 😭  love sri lankan cricket “என இம் மாதம் 10 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (10.02.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இணையத்தில் வைரலாகின்ற குறித்த புகைப்படத்தினை நாம் நன்கு அவதானித்த,இது தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது காணக்கிடைத்தது.

இருபதுக்கு20 உலக்கிண்ணப் போட்டிகளின் போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அமர்வதற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Facebook link

மேலும் குறித்த போட்டியின் போது சனத் ஜயசூரிய அணிந்திருந்த சட்டையும் வேறுப்பட்டு காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

link

நாம் குறித்த போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்புகள் மற்றும் காணொளிகளை ஆராய்ந்தபோது, சனத் ஜயசூரிய அவ்வாறான ஒரு செய்கையினை செய்ததாக காணமுடியவில்லை. Thepapare | gettyimages | Icc Video

குறித்த புகைப்படம் இருபதுக்கு20 உலக்கிண்ணத் தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் நடந்த 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 போட்டித் தொடரின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என சந்தேகம் எழவே, அது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

அத்தேடலின் போது, இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது சனத் ஜயசூரிய, இங்கிலாந்து துடுப்பெடுத்தாடும் வேளையில் 13 ஆவது ஓவரில் பதிரன பந்து வீச்சில், ஹாரி புரூகின் பிடியெடுப்பின் போது பதற்றமாக இருந்த காட்சியை எமக்கு காணக்கிடைத்தது.

அந்த காட்சியும் இணையத்தில் கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என பரவும் புகைப்படமும் ஒத்திருந்தமையை காணமுடிந்தது.

நாம் அதனை  நன்கு அவதானித்த போது இணையத்தில் வைரலாகின்ற புகைப்படத்தில் சனத் ஜயசூரியவிற்கு பின்னால் இருக்கும் பாதுகாவலரை காணவில்லை இருப்பினும், அவர் காற்சட்டையில் வைத்திருந்த walkie talkie யின் antenna பகுதி மட்டும் அவர் அமர்ந்திருக்கும் கதிரைக்கு பின்னால் காணப்படுவதை அவதானிக்க கிடைத்தது.

ஆகவே நாம் இதனை செயற்கை நுண்ணறிவு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனை நாம் மேலும் இதனை உறுதி செய்ய கூகுள் gemini இல் உட்படுத்தி ஆய்வு செய்த போது, இது Google AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:அயர்லாந்து அணியுடன் வெற்றிபெற கடவுளிடம் கையேந்திய சனத் ஜயசூரிய என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?

Fact Check By: S.G.Prabu 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *