இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினாரா பராக் ஒபாமா? 

False இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினார் பராக் ஒபாமா என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றி இப்படிக் கேட்பது நமக்குக் கிடைத்த ஒரு வரம் 😍

இன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை ஜனாதிபதியின் போராட்டத்தின் போது யாருக்கும் ஆதரவளிக்காத அவரது முடிவைப் பாராட்டினார். அவர் ஒரு அரசியல் முன்மாதிரி என்றும், சமீபத்தில் தான் கண்ட ஒரு துணிச்சலான ஆசியத் தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டார்…

அரசியல் பாகுபாடின்றி ஒரு நாடாக நாம் பெருமைப்படக்கூடிய தருணம் ❤️😍✨“என இம்  மாதம் 23 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (23.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

பாராளுமன்றத்தில் மார்ச் 20 ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, உலகம் எதிர்கொள்ளும் போர்ச் சூழலில் குறிப்பாக, இந்தப் பிரச்சினையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்சினை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். 

எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப் போக நாம் இடமளிக்க மாட்டோம். என்று வலியுறுத்திய ஜனாதிபதி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மார்ச் 9 மற்றும் 13 ஆகிய திகதிகளில் மூன்று கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தர ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார். 

இதற்கான அனுமதி பரிசீலிக்கப்பட்டு வரும் வேளையில்,அதே வேளை, அன்றைய தினம் மாலையில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இலங்கையின் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

இராணுவ மோதலுக்கான அறிகுறிகள் வெளிப்பட்ட நேரத்தில், நடுநிலைமையைக் கடைப்பிடித்து இவ்விரு கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் தெளிவான முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், Reuters, Economic Times, Al Jazeera, India Today மற்றும் பிற சர்வதேச ஊடகங்கள், போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கான அமெரிக்கக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துவிட்டது என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இருப்பினும், சமூக ஊடகப் பதிவில் காட்டப்பட்டுள்ளபடி, அமெரிக்கப் போர் விமானங்களைத் தரையிறங்க அனுமதிக்காத முடிவின் அடிப்படையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியை ஒரு துணிச்சலான தலைவர் என்று பாராட்டியிருந்தால், அத்தகைய செய்தி சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்களால் பெரிதும் பேசும் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும். இருப்பினும், எந்தவொரு புகழ்பெற்ற ஊடகமும் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை என்பது எமது ஆய்வின் மூலம் காணக்கிடைத்தது.

இலங்கை ஜனாதிபதி மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்த நாளிலோ அல்லது அதற்குப் பின்னரோ, Fox News அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி “ஒரு அரசியல் முன்மாதிரி மட்டுமல்ல, சமீப காலங்களில் ஆசியாவில் நான் கண்ட துணிச்சலான தலைவர்களில் ஒருவரும் ஆவார்” என்று அநுரவை பாராட்டிய எந்தப் பதிவையும் நாம் மேற்கொண்ட தேடலின் போது காணக்கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவிற்கும் Fox News அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவிற்கும் இடையே பல தெளிவான வேறுபாடுகளை நாங்கள் கவனித்தோம். அதாவது, பதிவின் வடிவம், வண்ணங்கள், அவர்களின் LOGO இடம்பெற்றுள்ள பகுதி, எழுத்துரு வடிவம் போன்றவற்றில் தெளிவான வேறுபாடுகள் உள்ளன. 

எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவு, Fox News இன் உத்தியோகப்பூர்வ பக்கத்திலோ அல்லது அதன் இணையதளத்திலோ வெளியிடப்பட்ட பதிவு அல்ல என கண்டறியப்பட்டது. 

இந்த podcast நிகழ்ச்சியின் போது, ​​தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கறுப்பின மக்களைப் பற்றி வெளியிட்ட நையாண்டி காணொளி, பாடகர் Bad Bunny மற்றும் 2028 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பராக் ஒபாமா தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். 

குறித்த நிகழ்ச்சியின் போது வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களும் சர்வதேச ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தப் பதிவானது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பங்கேற்ற podcast நிகழ்ச்சியிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து, அதனுடன் Fox News சின்னத்தையும் ஒரு புனையப்பட்ட அறிக்கையையும் சேர்த்துள்ளது என்பது தெளிவாகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி அநுரவை பராக் ஒபாமா பாராட்டினார் என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: இலங்கை ஜனாதிபதி அநுரவை பராட்டினாரா பராக் ஒபாமா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *