இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிமிர்த்தமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் முதலாவது கூட்டம் காலி முகத்திடலில் கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) அன்று நடைப்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு வந்த ஒரு நபரை தாக்கியதாக சில புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்தான உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Peoples Hero - අපේ නායකයා என்ற பேஸ்புக் பக்கத்தில் “கோத்தாவின் அட்டகாசம்

மட்டகளப்பிலிருந்து காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்த தமிழ் சகோதரர் ஒருவரை கோத்தாபயவின் கைகூழிகள் (ரவுடிகள்) கொடுரமாக அடித்து தாக்கும் காட்சி..கோத்தாவால் இனி இனவாத இனவாதத்தை தூண்டியே வெற்றிப்பெற முடியும் என அவர்களுக்கே தெறிந்து விட்டது. விடீயோ விரைவில். ” என்று கடந்த 10 ஆம் திகதி (10.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவோடு மூன்று புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிப்பிலுள்ள புகைப்படங்களை நாம் ஆய்வு செய்ய Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடிய வேளையில்,

குறித்த புகைப்படமானது, 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தில் shehan gunasekara என்ற பெயர் watermark ஆக பதியப்பட்டுள்ளது. செய்தி அறிக்கை

குறித்த நபரை பேஸ்புக் பக்கத்தில் தேடிய போது, அவர் இலங்கை நாட்டில் ஒரு புகைப்பட ஊடகவியலாளர் என்பதை கண்டறிந்தோம். மேலும் அவரின் உத்தியோகப்பூர்வ பக்கத்தில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Link | Archived

மேலும் குறித்த புகைப்படத்தின் Comment இல் shehan gunasekara lanka daily செய்தி லிங்கையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த லிங்கினை ஆய்வு செய்த வேளையில்,

பேஸ்புக் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இரண்டாவது புகைப்படத்தில் உள்ள நபர்களை அடையாளம் காணக்கிடைத்தது. செய்தி அறிக்கை

மேலும் இதனை உறுதி செய்து கொள்ள மீண்டும் lankadaily இணையத்தளத்திலிருந்த ஒரு புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதல் மேற்கொண்டோம்.

அப்போது, 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி Colombo Telegraph செய்தி இணையத்தளத்தில் வெளியாகி இருந்த செய்தி காணக்கிடைத்தது.

Colombo Telegraph இணையத்தளத்தில் வெளியாகி இருந்த செய்தியில் ஆர்பாட்டத்தின் போது ஏடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

அதில் பேஸ்புக்கில் தற்போது பரப்பப்படும் சில புகைப்படங்கள் 2013 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, எடுக்கப்பட்டது என உறுதியானது.

பேஸ்புக் பக்கத்தில் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்தவரை தாக்கியதாக வெளியான புகைப்படத்தில் தாக்கப்படுபவரும், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்பாட்டத்தின் போது தாக்கப்படுபவரும் ஒரே நபர். மேலும் தற்போது பகிரப்படும் புகைப்படத்தில் கையில் கம்போடும், நீலம் மற்றும் மஞ்சள் கலந்த சேட் அணிந்த நபரும், அத்துடன் ஒருவரை தாக்க முற்படும் சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர்களும் 2013 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்த தமிழ் சகோதரர் ஒருவரை கோட்டபாயவின் கைக்கூலிகள் தாக்கியதாக வெளியான புகைப்படமானது, 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட முறுகலின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

Avatar

Title:காலிமுகத்திடல் கூட்டத்திற்காக வந்தவரை கோட்டபாய தரப்பினர் தாக்கினரா..?

Fact Check By: Nelson Mani

Result: False