புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

False இலங்கை | Sri Lanka சமூகம் | Society

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின்  முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

புத்தளம் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறப்போகிறது. என தெரிவிக்கப்பட்டு நேற்று (2025.06.02) ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.

FB | FB 

Fact Check (உண்மை அறிவோம்)

எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காண முடியவில்லை.

எனினும் சில ஊடகங்களில் புத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கும், புத்தளம் சுகாதார அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.Link 

அத்துடன் கடந்த 2025.03.06 ஆம் திகதி வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் புத்தளம் தள வைத்தியாசலையை மாவட்ட பிரதான வைத்தியசாலையாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளார் எனவும் அது தொடர்பில் பார்க்கும் போது இந்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான தேவைகள் காணப்பட்டாலும் அது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரினால் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவ்வாறு தரமுயர்த்துவது தொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகளை தர முயர்த்துதல் என்பது யாருடைய தலையீடுகளும் இன்றி தேவைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சு

எனவே நாம் அது தொடர்பில் சுகாதார அமைச்சரின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

அத்துடன் கடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (2025.06.03) இடம்பெற்றது. இதன்போது புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எந்தவித அறிப்புகளும் வெளியிடப்படவில்லை.

மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிவிப்புகளில் புத்தளம் தள வைத்தியசாலை தரமுயர்த்துவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளதா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித அறிவிப்புகளையும் எம்மால் காணமுடியவில்லை.

அத்துடன் குறித்த  சமூக ஊடகப்பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின்  முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறாயின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் இது குறித்து ஏதேனும் தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளாரா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்த தகவல்களை அங்கு காணமுடியவில்லை.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் நாம் புத்தளம் தள வைத்தியசாலைக்கு தொடர்புகொண்ட போதிலும் அவர்களிடம் இருந்து எமக்கு இது குறித்து உரிய பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரை இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *