இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி தெளிவின்றி உள்ளீர்களா?

Presidential Election 2024

பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விதத்தில் நாம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் ஒரே நிரலில் காணப்படுகின்றன

மாதிரி படம்

E

ஏனைய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் இரண்டஜ நிரல்களாக அச்சிடப்பட்டுள்ளன

மாதிரி படம்

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

MR_PE_2024_54_T

வாக்களிக்கும் சரியான முறை

கட்சிக்கு வாக்களித்தல்

  • நீங்கள் கட்சிக்கு அல்லது சுயேட்நை குழுவிற்கு வாக்களிக்கும் போது குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் மற்றும் முலட்சினைக்கு முன்னாள் புள்ளடி (x) இடவேண்டும்
  • ஜனாதிபதித் தேர்தலை போன்று பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,2,3 என்ற இலக்கங்களை இடமுடியாது
  • அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக்கோ அல்லது சுயேட்சை குழுவிற்கோ நீங்கள் வாக்களிக்க முடியாது
  • அவ்வாறு வாக்களிக்கும் பட்சத்தில் உங்கள் வாக்கு செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்

விருப்பு வாக்குகளை வழங்கும் முறை

  • நீங்கள் வாக்களித்த கட்சியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் இலக்கங்கள் வாக்குச்சீட்டின் கீழே வழங்கப்பட்டிருக்கும், எனவே நீங்கள் வாக்களித்த கட்யில் போட்டியிடும் உறுப்பினர்களின் இலக்கத்திற்கு மேல் புள்ளடி (x) இடவேண்டும்
  • இதன்போது நீங்கள் மூன்றிற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை வழங்க முடியாது
  • மேலும் ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்காது அதற்கு பதிலாக அவர்களுக்குரிய இலக்கங்க்  மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும்
  • எனவே நீங்கள் தெரிவு செய்யவுள்ள வாக்காளர்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொண்டு குறித்த இலக்கத்திற்கு மேல் புள்ளடி (x) இடவும்

மாதிரி படம்

  • மேலும் வாக்குச்சீட்டில் நீங்கள் தெரிவு செய்யும் கட்சிக்கு சரியான முறையில் புள்ளடி (x) இட்டு, அதே வாக்குச்சீட்டில் மூன்றிற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை நீங்கள் வழங்கியிருக்கும் பட்சத்தில், கட்சிக்கு நீங்கள் வழங்கிய வாக்கு மாத்திரமே செல்லுபடியானதாக கருதப்படும். உங்களின் விருப்பு வாக்கு நிராகரிக்கப்படும்

நிராகரிக்கப்படும் வாக்குகள்

  • ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகளுக்கு அல்லது சுயேட்சை குழுக்களுக்கு நீங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்
  • வாக்குச்சீட்டில் புள்ளடி (x) யை தவிர்த்து வேறு ஏதாவது அடையாளங்களோ அல்லது வாக்குச்சீட்டில் கிறுக்கப்பட்டிருந்தாலோ உங்கள் வாக்கு நிராகரிக்கப்படும்

முக்கிய விடயமாக ஜனாதிபதித் தேர்தலை போன்று, பாராளுமன்றத் தேர்தலில் 1,2,3 என இலக்கமிடுவதனை தவிர்க்க வேண்டும்

மேலும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் போது புள்ளடி(x) மாத்திரமே இடவேண்டும் என்பதனை கவனத்தில் கொள்க

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்திற் கொண்டு வாக்களிக்கும் பட்சத்தில் உங்களின் பெறுமதியான வாக்கு செல்லுபடியான வாக்காக கருதப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *