28 YEARS LATER  திரைப்படத்தில்  Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?

False சர்வதேசம் | International

INTRO

பெரும்பாலான ஹொலிவுட் திரைப்பட ரசிகர்கள் சிலியன் மார்பியை (Cillian Murphy) பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றே கூற வேண்டும். காரணம் இவ்வாண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருதுகளில் Oppenheimer திரைப்படம் 7 பிரிவுகளில் விருது வென்றது. அந்தவகையில் குறித்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதினை சிலியன் மர்பி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

“28 YEARS LATER“ என்ற திரைப்படத்தின் முன்னோட்டமானது ( trailer) கடந்த 2024.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த முன்னோட்டக் காட்சியின் ஒரு பகுதியில் எலும்பும் தோலுமான உருவத்தோற்றத்துடன் Zombie ஆக வருபவர் சிலியன் மர்பி என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறித்த சமூக ஊடக பதவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விபரம் (what is the claim)

Facebook Link  | Archived Link

குறித்த பதிவில் “28 YEARS LATER“ இல் சிலியன் மர்பியின் முதற் பார்வை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தகவலின் உண்மைத் தன்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

Danny Boyle  இயக்கத்தில் உருவாகியுள்ள “28 YEARS LATER“  திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள நிலையில் கடந்த 2024.12.10 ஆம் திகதி அதன் முன்னோட்டம் ( trailer) வெளியானது.

இதில் எலும்பும் தோலுமான தோற்றத்துடன் Zombie மனிதன் தோன்றும் காட்சியொன்று அமைந்திருந்தது. 

குறித்த காட்சியில் வரும் Zombie மனிதன் கதாப்பாத்திரத்தில் தோன்றுவது சிலியன் மர்பி என தெரிவித்திருந்த நிலையில் Sony Pictures இன் இணையத்தளத்தில் குறித்த படத்தின் விபரங்களில் சிலியன் மர்பியின் பெயர் நிர்வாக தயாரிப்பாளர் என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், நடிகர்களில் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இருக்கவில்லை என்பதனையும் அவதானிக்க முடிந்தது.

மேலும், “28 YEARS LATER“ திரைப்படத்தின் விளம்பரங்களில் மர்பியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என BBC செய்திச் சேவையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் சிலியன் மர்பியின் பெயர் திரைப்படத்தின் வெளியீட்டின் முன்னரான விளம்பரங்களின் போதும் குறிப்பிடபடவில்லை எனினும் குறித்த திரைப்படத்தில் Zombie மனிதன் கதாப்பாத்திரத்தில் சிலியன்  மர்பியே நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  குறித்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிலியன் மர்பியா அல்லது வேறு நடிகரா என்பது தொடர்பில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை பல சர்வதேச இணையத்தளங்களில்  “28 YEARS LATER“ திரைப்படத்தில் Zombie மனிதன் கதாப்பாத்திரத்தில் சிலியன் மர்பி நடிக்கவில்லை என தெரிவிக்கபட்டிருந்ததனையும் எம்மால் காண முடிந்தது. Link | Link | Link 

குறித்த இணையத்தளங்களின் கருத்தின்படி “28 YEARS LATER“ திரைப்படத்தின் முன்னோட்டத்தில் பூந்தோட்டத்திற்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கும் Zombie மனிதன் சிலியன் மர்பி என பலர் நம்பினாலும் அது உண்மையில்லை எனவும் Zombie மனிதன் கதாப்பத்திரத்தில் நடித்தவர் கலைத்துறையில்  நிபுணத்துவம் பெற்ற அங்கஸ் நீல் (Angus Neill) என உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  The Guardian இணையத்தளம் இது தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையத்தளத்திற்கு இது தொடர்பில் அங்கஸ் நீல் கருத்து தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் Danny Boyle தன்னை Zombie மனிதன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாக The Guardian இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த அங்கஸ் நீல்  இதன் போது படத்தில் நடித்த அனுபவத்தையும் விபரித்திருந்தார்.

அவர் ஒரு கலைஞர் என்று குறிப்பிப்பட்டுள்ள பதிவு

Sony Pictures இணையத்தளத்தில் குறித்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக சிலியன் மர்பியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நடிகர்களின் பெயர் பட்டியலில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவிலை அதேபோன்ற குறித்த பெயர் பட்டியலில் அங்கஸ் நீலின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

“28 YEARS LATER“ திரைப்படத்தின் முன்னோட்டத்தில் ( trailer) ஒரு காட்சியில் தோன்றும்   Zombie மனிதன் காதாப்பாத்திரத்தில் வருபவர் சிலியன் மார்வி அல்ல என சர்வதேச இணையத்தள தகவல்களில் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டாலும்,  இது தொடர்பில் படத்தின் இயக்குனர் Danny Boyle இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதமையால் குறித்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது சிலியன் மர்பியா அல்லது அங்கஸ் நீலா என்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எட்ட முடியவில்லை

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:28 YEARS LATER திரைப்படத்தில் Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?

Fact Check By: suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *